மேலும் அறிய

ESIC Salem Recruitment: மருத்துவம் படித்தவரா? சேலம் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் நாளை நேர்காணல்- விவரம்

ESIC Salem Recruitment: இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு சேலத்தில் நாளை (29.10.2023) காலை 11 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு சென்று நேர்காணலில் பங்கேற்கலாம்.

பணி விவரம்:

பகுதிநேர Medical Referee

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதிய விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மாதத்திற்கு 20 செசென்ஸ் பணி செய்ய வேண்டும்.

திங்கள் முதல் வெள்ளி வரை 9.30 முதல் 5.30 வரை பணி இருக்கும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு இ.எஸ். ஐ. அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 

முகவரி:

ESI Corporation,
Sub Regional Office, Salem.
No.39/57, Theerthamalai Vaniga Valagam,
Three Roads,
Salem - 636 009

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://srosalem.esic.gov.in/attachments/circularfile/f1eb4b7623a2332ec77c7ee32719b4a2.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 30.10.2023 - காலை 11 மணி முதல்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre)  உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • மைய நிர்வாகி
  • முதுநிலை ஆலோசகர்
  • கணினி நிர்வாகி
  • வழக்கு பணியாளர்  (Case Worker)
  • உதவியாளர்
  • பாதுகாப்பாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • மைய நிர்வாகி பணிக்கு சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • வழக்கு பணியாளர், முதுநிலை ஆலோசகர்  பணிகளுக்கு சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.
  • கணினி நிர்வாகி பணிக்கு கணினி அறிவியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • பல்நோக்கு பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், சமையல் பணியில் முன் அனுபவம் வேண்டும். அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதி சான்று இருக்க வேண்டும்.
  • உள்ளூரில் வசிப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • மைய நிர்வாகி - ரூ/30,000/-
  • முதுநிலை ஆலோசகர் - ரூ.20,000/-
  • கணினி நிர்வாகி - ரூ.18,000/-
  • வழக்கு பணியாளர்  (Case Worker) - ரூ.15,000/-
  • உதவியாளர் -ரூ.6,500/-
  • பாதுகாப்பாளர்  - ரூ.10,000/-

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல அலுவலர்

மாவட்ட சமூக நல அலுவலகம்,

3/264, குமரன் தெரு,

சீனிவாசபுரம்,

மயிலாடுதுறை - 609 001

தொடர்பு எண் - 04364 - 212429

விண்ணப்பிக்க கடைசி நாள் - 31-10-2023

https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/10/2023101447.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - எங்கெங்கு தெரியுமா? வானிலை அறிக்கை
TN Rain Alert: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - எங்கெங்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Breaking News LIVE 3rd NOV: தப்புமா நெல்லை, குமரி? மிக கனமழைக்கான எச்சரிக்கை
Breaking News LIVE 3rd NOV: தப்புமா நெல்லை, குமரி? மிக கனமழைக்கான எச்சரிக்கை
Rasipalan Today Nov 3: மேஷம் கவனமா இருங்க..ரிஷபத்துக்கு நட்பு பலம் - உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 3: மேஷம் கவனமா இருங்க..ரிஷபத்துக்கு நட்பு பலம் - உங்கள் ராசிக்கான பலன்?
Nalla Neram Today Nov 03: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Nov 03: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - எங்கெங்கு தெரியுமா? வானிலை அறிக்கை
TN Rain Alert: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - எங்கெங்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Breaking News LIVE 3rd NOV: தப்புமா நெல்லை, குமரி? மிக கனமழைக்கான எச்சரிக்கை
Breaking News LIVE 3rd NOV: தப்புமா நெல்லை, குமரி? மிக கனமழைக்கான எச்சரிக்கை
Rasipalan Today Nov 3: மேஷம் கவனமா இருங்க..ரிஷபத்துக்கு நட்பு பலம் - உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 3: மேஷம் கவனமா இருங்க..ரிஷபத்துக்கு நட்பு பலம் - உங்கள் ராசிக்கான பலன்?
Nalla Neram Today Nov 03: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Nov 03: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
உத்தரவிட்டாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா? குற்றம் சாட்டிய கனடா - கொத்தெழுந்த இந்தியா!
உத்தரவிட்டாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா? குற்றம் சாட்டிய கனடா - கொத்தெழுந்த இந்தியா!
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
Embed widget