JOB ALERT: இன்டர்வியூக்கு வந்தாலே போதும்... 20 ஆயிரம் இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- வெளியான அறிவிப்பு
JOB ALERT: தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிட பல திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், 20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு புதிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதிலும் சென்னையில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்காமல் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் தொழில் நிறுனவங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை திருப்பூர் மற்றும் திருச்சியில் 20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
அந்த வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்துகிறது.
நாள் : 24.01.2026 சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம் : ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருமுருகன்பூண்டி, திருப்பூர்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் முன்னோடி வங்கி அலுவலர் திருப்பூர் இவர்களின் வாயிலாக மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருப்பூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 0421-2999152, 94990 55944
இதே போல திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.
நாள் : 24.01.2026 சனிக்கிழமை
நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம் : பிஷப் ஹீபர் கல்லூரி, வயலூர் ரோடு, புத்தூர், திருச்சி-17.
சிறப்பு அம்சங்கள்
150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைப் பதிவு.
அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பிற்கான பதிவு.
கல்வித்தகுதிகள்
* எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை. ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், etc.
மேலும் விவரங்களுக்கு
* துணை இயக்குநர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொடர்புக்கு: 0431-2413510. 94990 55901





















