மேலும் அறிய

சட்ட சேவைகள் பிரிவில் வேலை வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கீழ் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சட்ட சேவைகள் பிரிவில் அலுவலக உதவியாளர், சட்ட ஆலோசகர் வேலை காலியாக உள்ளது. மொத்தம் 5 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ள முழு விபரங்கள் உள்ளே.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள். அப்போ கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கீழ் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்படுகிறது. இங்கு சட்ட ஆலோசகர் உட்பட அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்படுகிறது.

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1
துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்  2
உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்  1
அலுவலக உதவியாளர்/ எழுத்தர் 1
என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க.

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் குற்றவியல் சட்டத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாடு இருக்க வேண்டும். கணினி திறன் அவசியம்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 20 குற்ற வழக்குகளில் வாதாடி இருக்க வேண்டும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 3 ஆண்டுகள் வரை குற்ற வழக்குகள் கையாண்டதில் அனுபவம் தேவை. ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கணினி திறன் அவசியம்.

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும். துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்/ தலைமை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் (District Legal Services Authority), மாவட்ட நீதிமன்ற வளாகம், கடலூர் - 607 001.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2025, நேர்காணல் 08.11.2025 காலை 10 மணி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Embed widget