BHEL Recruitment 2023: 680 காலிப் பணியிடங்கள்; பெல் நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?
BHEL Recruitment 2023: திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
BHEL Recruitment 2023
திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.. மொத்தம் 680 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரங்கள்:
Graduate Apprentice,Technician Apprentice ,Trade Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
Graduate Apprentice - 179
Technician Apprentice- 398
Trade Apprentice -103
மொத்த பணியிடம் - 680
ஊதிய விவரம்:
Graduate Apprentice - ரூ.9,000/-
Technician Apprentice- ரூ.8,000/-
Trade Apprentice -ரூ.7,700 - ரூ.8,050/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்,.
வயது வரம்பு:
27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.12.2023
அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://www.apprenticeshipindia.gov.in/
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.apprenticeshipindia.gov.in/ கிளிக் செய்யவும்,
ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து“BHEL Apprentice Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.
அறிவிப்பின் முழு விவரத்திற்கான லிங்க் - https://trichy.bhel.com/tms/app_pro/Graduate_App.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.