மேலும் அறிய

செங்கல்பட்டு: 5000 வேலைவாய்ப்புகள்! தனியார் துறை முகாம், இலவசம்! உடனே விண்ணப்பியுங்கள்!

"செங்கல்பட்டு மாவட்டத்தில் 5000 பேர், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்"

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27.09.2025 சனிக்கிழமை அன்று விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி, பையனூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.  

செங்கல்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரிய மற்றும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பான தகவல்களை வேலைநாடுநர்களும் பெறலாம். 

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதிகள் என்ன ?

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்நகல்கள், சுய விவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 27.09.2025, சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பழைய மாமல்லபுரம் ரோடு, பையனூரில் உள்ளவிநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில், நடைபெறும் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு (Employment registration card) ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget