Cracked Heels: பனிக்காலத்தில் அதிகரிக்கும் குதிகால் வெடிப்பு.. சரி செய்ய ஈஸி டிப்ஸ் இதோ!
வெயில் காலம், மழைக்காலம், பனிக்காலம் என எடுத்துக் கொண்டால் இதனை சரியாக நாம் பின்பற்ற முடியும். தற்போது இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த காலக்கட்டத்தில் நிச்சயம் வானிலை வறண்டு இருக்கும்.

உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான பரமாரிப்பு என்பது உள்ளது.
குறிப்பாக வெயில் காலம், மழைக்காலம், பனிக்காலம் என எடுத்துக் கொண்டால் இதனை சரியாக நாம் பின்பற்ற முடியும். தற்போது இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த காலக்கட்டத்தில் நிச்சயம் வானிலை வறண்டு இருக்கும். அதாவது வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். மழை மற்றும் பனி பொழிவு இருக்கும். இந்த ஈரப்பதம் சரும பிரச்னைகள், கால் பாதத்தில் வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனை சரி செய்ய என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.
குதிகால் வெடிப்பை சரி செய்ய டிப்ஸ்
அந்த வகையில் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்பில் முதல் படி கால்களை சுத்தம் செய்வது தான். அதாவது, ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்க்க வேண்டும். அதில் உங்கள் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது குதிகால்களில் உள்ள இறந்த, கடினமான சரும செல்களை நீக்கி பாதத்தை மென்மையாக்கும். பின்னர் அதை ஒரு பியூமிஸ் கல் அல்லது பிரஷ்ஷால் தேய்க்கவும். இது வறட்சியைக் குறைக்கிறது. இது பாதங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் கால்களை நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு உலர்த்திய பிறகு, தேங்காய் எண்ணெய் தேய்த்து உங்கள் குதிகால்களை 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமத்தின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இது விரிசல்கள் ஏற்படமாக தடுக்கிறது. இதை தினமும் செய்தால், உங்கள் குதிகால் வலி, பிரச்னை வேகமாக குணமாகும்.
ஒரு டீஸ்பூன் வாஸ்லினில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவில் குதிகால்களில் தடவி சாக்ஸ் அணியுங்கள். இந்த கலவை இரவு முழுவதும் சருமத்தை ஊட்டமளிக்கிறது. இது பாத வெடிப்புகளை குறைத்து அழகாக கால்கள் அமைய கைகொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இரண்டு ஸ்பூன் கிளிசரினுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து குதிகால் மீது தடவவும். கிளிசரின் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ரோஸ் வாட்டர் குளிர்ச்சியையும் மென்மையையும் தருகிறது. குதிகால்களில் வெடிப்புகள் அதிகமாக இருந்தால், இதை தினமும் பயன்படுத்தலாம். பழுத்த வாழைப்பழத்தை மசித்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் குதிகால்களில் 15-20 நிமிடங்கள் தடவி விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும்.
இவையெல்லாம் விட குளித்த பிறகு அல்லது கால்களைக் கழுவிய பின் அவற்றை நன்கு உலர்த்துவது மிகவும் முக்கியம். ஈரமான குதிகால்களில் வெடிப்புகள் ஈஸியாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் கால்களை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















