தினம் ஒரு ஸ்பூன்... பாதாம் பிசினை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்… உடலுக்கு அவ்வளவு நன்மை!
தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால், இரத்தம் சுத்தமாகும், பித்தம் தணியும், முகம் வசீகரமாகும், ஆண்மை பெருகும், சுறுசுறுப்பு கூடும், இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவ குணம் கொண்டது. இதனை வைத்து வட இந்தியாவில் பாரம்பரியமாக செய்யும் ரெசிபி ஒன்று இருக்கிறது. அனைத்து சத்துப்பொருட்களும் கலந்த அந்த ரெசிபியை, தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால், உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக எந்த வயதிலும் இளைஞர் போல வாழலாம். மேலும் இரத்த விருத்தி ஏற்படும், பித்தம் தணியும், முகம் வசீகரமாகும், வெள்ளைப் படுதலை தடுக்கும், ஆண்மையை பெருக்கும், உற்சாகம், சுறுசுறுப்பு கூடும், நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்பு மண்டலம் பலப்படுவதால் ஆண்களின் விரைப்பு தண்மை கூடும், இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், விந்துவில் உயிரணுக்கள் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் - ¼ கப்
பாதாம் - ¼ கப்
முந்திரி - ¼ கப்
வால்நட் - ¼ கப்
பூசணி விதை - ¼ கப்
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பொடி - ½ கப்
ஜாதிக்காய் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 4 அல்லது 5
இஞ்சிப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 250ml
சர்க்கரை - ⅓ கப்
செய்முறை:
நெய்யை கடாயில் ஊற்றி சூடேற்றவும். கடாய் சூடானதும் நாம் எடுத்து வைத்திருக்கும் பாதாம் பிசினை எடுத்து அதில் போட்டு வறுக்கவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுத்ததும் அதனை எடுத்து ஓரமாக வைக்கவும்.
அதே நெய்யில் பாதம், முந்திரி, வால்நட், பூசணி விதை, கசகசா, தேங்காய் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
இப்போது வறுத்து வைத்த பாதாம் பிசினை எடுத்து மிக்சியில் போட்டு அரைக்கவும். நன்றாக பொடியாக வந்தவுடன், அத்துடன் வறுத்து வைத்த பாதாம், முந்திரி, பூசணி விதை, கசகசா, தேங்காய் பொடி மிக்ஸை எடுத்து அத்துடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் ஜாதிக்காய் பொடி, இடித்த ஏலக்காய், இஞ்சிப்பொடி சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை ஓரமாக வைத்துவிட்டு, அந்த கடாயில் கால் லிட்டர் பால் ஊற்றி வேக வைக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக சூடேறியதும், நாம் அரைத்து வைத்திருந்த கலவையை எடுத்து அதில் போட்டு அடுப்பை குறைந்த ஃப்ளேமில் வைத்து மெதுவாக கிண்டவும். அடிப்பிடிக்கமல் இருக்க கிண்டி கொண்டே இருக்கவும். நன்றாக அல்வா போன்ற பதத்திற்கு வரும்வரை வதக்கி கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாம் ஆரம்பத்தில் சேர்த்த நெய் அதிலிருந்து பிரிந்து வரும். அதுவரை நன்றாக கிண்டி எடுத்துக்கொள்ளவும்.
தயாரான பிறகு, அதனை எடுத்து ஒரு சமமான தட்டில் கொட்டி தட்டையாக வைத்து நன்றாக குளிர வைக்க வேண்டும். முழுவதும் சூடு ஆறியதும் அதனை எடுத்து காற்று புகாத கண்டெய்னரில் வைத்து அடைக்கவும்.
இதனை இருபது நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )