Alka Yagnik : ஹெட்ஃபோன்ஸில் சத்தமாக பாட்டு கேட்பவரா நீங்கள்...உணர்திறன் நரம்பு பாதிப்பு என்றால் தெரியுமா?
பிரபல பாடகி அல்கா யாக்னிக் தான் அரிய வகை செவிகளில் உணர்திறன் நரம்பு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்
அல்கா யாக்னிக்
பிரபல இந்தி பாடகி அல்கா யாக்னிக் தனக்கு செவிகளில் உணர்திறன் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வைரஸ் தாக்குதலால் தனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபக்கம் இந்த பாதிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது எல்லாரையும் பாதிக்கும் நோயா, இதை குணப்படுத்தும் வழிவகைகள் தொடரபாக பல கேள்விகளை கூகுளில் மக்கள் தேடத் துவங்கியுள்ளார்கள். இந்த பாதிப்பு குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
sensory neural nerve hearing loss எப்படி ஏற்படுகிறது?
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு சில நாட்களில் அல்லது திடீரென்று ஒரு காதில் கேட்கும் திறன் குறையும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தலைசுற்றல் , காதுகளில் ஒருவிதமான இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும் . 1 லட்சத்தில் 5 முதல் 20 நபர்களே இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணங்களை கண்டுபிடிக்க முடிவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Herpes Simplex , Measles , Mumps , Varicella Zoster Virus போன்ற வைரஸ்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக செவிகளில் உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிகிச்சை முறை
இந்த பாதிப்பிற்கு உள்ளானவர்களில் 30 முதல் 65 சதவீதம் நபர்கள் மட்டுமே தொடர் சிகிச்சைகளில் குணமடைவதாகவும் அதுவும் எவ்வளவு சீக்கிரமாக பாதிப்பு கண்டறியப்படுகிறதோ அவ்வளவு குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வைரஸால் ஏதாவது பாதிப்பு காதுகளின் உட்பகுதிகளில் வீக்கம் ஏற்படும் பட்சத்தில் அதை கட்டுக்குள் வைக்க ஆண்டிபயாடிக் தடுப்பூசிகள் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
நோயினால் முழுமையாக பாதிப்படைந்தவர்களுக்கு செயற்கை கருவிகள் பொருத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
எப்படி பாதுகாப்பது?
அளவுக்கதிகமான சத்தத்தை தவிர்ப்பது, செவித்திறனை பாதிக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்க தொடர்ச்சியாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
மேலும் ஆரோக்கியமான உடலும் காது போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். திடீரென்று ஒன்று அல்லது இரண்டு காதுகளில் கேட்கும் திறன் குறைந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )