அதிகாலையில் நெய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? அவசியம் என்ன?
அதிகாலையில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
அதிகாலையில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் நெய்க்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலையில் நெய் சாப்பிட வேண்டிய அவசியம் பற்றி அறிவோம்.
நல்ல புஷ்டியா இருக்கும் ஹன்ஸிகாவைப் பார்த்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நல்லா நெய்க் குழந்தை மாதிரி இருக்கீங்க என்று சொல்வர். நெய் உடலுக்கு உண்மையில் உள்ளிருந்து வெளியே தோல் வரை மிளிரச் செய்யும் ஒரு உணவு பதார்த்தம். நெய் சாப்பிட்டால் கொழுப்பு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்க அமெரிக்கர்கள் அதன் சிறப்பை உணர்ந்து க்ளாரிஃபைட் பட்டர் என பயன்படுத்தி வருகின்றனர்.
சரி நெய் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்..
காலையில் ஏன் நெய் சாப்பிட வேண்டும் என்று கேட்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஒருநாளைக்கான எனர்ஜியை அதிகாலையில் சாப்பிடும் ஒரு ஸ்பூன் நெய் துவக்கிவைக்கும். ஒரு டீஸ்பூன் நெய்யும் ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான நீரும் அருந்திவந்தால் எடையை சீராக பாதுகாக்க முடியும். உடலில் உள் உறுப்புகளில் உள்ள சில புண்களைக் குணப்படுத்தும். இத்துடன் பச்சை மஞ்சள் கொஞ்சம் சேர்ந்தால் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஒரு சிறந்த ஆன்ட்டி வைரஸ் கலவையாகும். இது தொண்டைப் புண், சளி, காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக விளங்கும்.
நெய்யில் தேவையான கொழுப்பில் கரையும் தன்மை கொண்ட வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் D, K, E மற்றும் A உள்ளன. இவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
இது தவிர நெய்யில் அதிகமாக ப்யூட்டிரிக் அமிலம் (butyric acid) உள்ளது. இது குடலில் நல்ல பாக்டாரீயக்கள் உடைக்கப்படும் போது உருவாகிறது. குடலில் உள்ள கோலன் செல்கள் இதை கிரஹித்துக் கொள்கின்றன. குடல் சுவர்களை வலுப்படுத்த ப்யூட்டிரிக் அமிலம் (butyric acid) மிகவும் முக்கியமானது. Crohn’s disease எனப்படும் நோயைக் குணப்படுத்த நெய் உதவும்.
நெய்யில் உள்ள ஊட்டச்சத்துகள் செல், திசு சிதைவைத் தடுக்கிறது. நீண்ட ஆயுளைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நமது செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உடலை ஒட்டுமொத்தமாக குணப்படுத்தும் வேலையை செய்யும்.
நெய்யில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. இது சருமத்தைப் பொலிவாக வைக்கும். வயதான தோற்றம் சருமத்திற்கு சீக்கிரம் வராமல் தடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். நெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசரும் கூட.
நெய் ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு சூப்பர் எனர்ஜி சோர்ஸ் என்றழைக்கப்படுகிறது. அதிலுள்ள ஹெல்த்தி ஒமேகா ஃபேட்டி அமிலங்கள் உடலின் லீன் மாஸை கூட்டி ஃபேட் மாஸை குறைக்கும். ஆகையால் நெய், உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல உணவு.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )