மேலும் அறிய
Advertisement
Tn Corona Update: கோவையில் இன்று 597 பேருக்கு கொரோனா; 7 பேர் உயிரிழப்பு
கோவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 597 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 18 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 5110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1089 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 11 ஆயிரத்து 299 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2017 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 506 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 88723 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 83915 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 585 ஆகவும் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 294 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 448 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 81821 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79235 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 747 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 118 பேர் குணமடைந்துள்ள நிலையில், 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28191 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27362 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion