மேலும் அறிய

மயிலாடுதுறை: புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று! உயிரிழப்பு இல்லை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 21,956 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை: புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று! உயிரிழப்பு இல்லை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட 2 பேருக்கு குறைவு. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 956 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 21 ஆயிரத்து 417 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 28 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 23 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 281 ஆக தொடர்கிறது.

மயிலாடுதுறை: புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று! உயிரிழப்பு இல்லை!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரத்து 930 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 5 லட்சத்து ஆயிரத்து 786 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 88 ஆயிரத்து 144 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 56 ஆயிரத்து 790 பேருக்கு கோவிஷீல்ட் 5 லட்சத்து 33 ஆயிரத்து 140 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 5,010 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 377 ஆண்களுக்கும், 3 லட்சத்து 12 ஆயிரத்து 460 பெண்களுக்கும், திருநங்கைகள் 93 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget