மேலும் அறிய

திருவண்ணாமலை : புதிதாக இன்று 359 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் இன்று 359 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு இன்று 1 நபர் உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது.மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருந்தது. 


இதுவரை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 180 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 55 ஆயிரத்து  329 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 359 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று 1 நபர் உயிரிழப்பு .  இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 676-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 2175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 


திருவண்ணாமலை : புதிதாக இன்று 359 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 


மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திருவண்ணாமலையில் ஏராளமான முன்கள பணியாளர்கள் செலுத்திக்கொண்டுவருகின்றனர். 


இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தோற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நாடு முழுவதும்  பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முகாமினை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். அதன்படி,  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று தொடங்கப்பட்ட கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசியை அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 75 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் மாவட்ட முழுவதும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசியை  2788 நபர்கள் செலுத்திக்கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
Embed widget