மேலும் அறிய

மயிலாடுதுறை: புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்றின் எண்ணிக்கை 26,035 ஆக உயர்வு.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுப்பிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஓமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அறிமுகம் ஆகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக வல்லரசு நாடுகளுக்கே பெரும் சவாலாக இருந்தது வருகிறது.

மயிலாடுதுறை: புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று

இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 26 ஆயிரத்து 35 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 24 ஆயிரத்து 662 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் மாவட்டத்தில் புதிதாக 77 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 153  நபர்கள் குணமாகி வீடு சென்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையம், வீடுகளில் தனிப்படுத்தி கொண்டு சிகிச்சை என 1051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 322 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை: புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் நாடுமுழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  17 லட்சத்து  87 ஆயிரத்து  402  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

முதல் தவணை தடுப்பூசியும் 10 லட்சம் 38 ஆயிரத்து 471 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 45 ஆயிரத்து 592  பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 3 ஆயிரத்து 339 பேருக்கு செலுத்தியுள்ளனர்.  இதில் ஆண்கள் 8 லட்சத்து 31 ஆயிரத்து 536 பேரும், பெண்கள் 9 லட்சத்து 52 ஆயிரத்து 205 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 322 தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இதில் கோவாக்சின் 1 லட்சத்து 86 ஆயிரத்து 16 பேருக்கும், கோவிஷீல்ட் 16  லட்சத்து  ஆயிரத்து 386 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget