திருவண்ணாமலை :129 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 121 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 48ஆயிரத்து 283 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 129 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது .
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிபடியாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் மருத்துவமனை நிலைப்பாடுகள் கூறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வா வேலு உள்ளிட்டோர் இன்று ஆய்வு நடத்தினர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது .
தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மட்டும் 1632 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )