Priyanka Gandhi Tests Covid Positive : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்திக்கு உறுதியானது கொரோனா தொற்று..
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்தாண்டு தொற்று கண்டறியப்படுவது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் 3 ம் தேதி அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்த நாளே பிரியங்கா காந்தி வத்ராவும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ( (Indian National Congress) புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வரை கடந்த 5 ம் தேதி பேரணி நடத்தினர். இதில், பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Congress MP Rahul Gandhi's visit to Alwar, Rajasthan scheduled for today cancelled as he is unwell. He was scheduled to attend the party's 'Netratv Sankalp Shivir' there: Sources
— ANI (@ANI) August 10, 2022
(File photo) pic.twitter.com/A4pEVCEwMU
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ராஜஸ்தான் மாநிலம் அல்வாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர் இன்று கட்சியின் 'நேத்ரத்வ் சங்கல்ப் ஷிவிர்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவளுக்கும் லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவ ஆலோசனையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர், அவர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 18 அன்று, அவர் நிலையாக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை கூறியது, செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )