மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை...

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1662 ஆக உள்ளது. மேலும் 57 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 95,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,995 ஆக உயர்வு. மாவட்டத்தில் 764 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5081 பரிசோதிக்கப்பட்டதில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சேலம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:

தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக  38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் 29 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 257 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 26,983 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,597 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 1,971 பரிசோதிக்கப்பட்டதில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 31 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 18 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 331 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 338 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,791 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1667 பரிசோதிக்கப்பட்டதில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget