மேலும் அறிய

Apollo: இந்தியாவிலே முதன்முறை! அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையில் வெற்றி கண்ட அபோலோ!

சென்னையில் உள்ள புகழ்பெற்ற அபோலோ தனியார் மருத்துவமனை இந்தியாவிலே முதன்முறையாக அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

இந்தியாவில் பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இது, நாட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன்  (Adaptive Deep Brain Stimulation - aDBS) சிகிச்சையின் மருத்துவச் செயல்பாடாகும். 

இச்சிகிச்சை முறை, 2 மார்ச் 2026 அன்று டாக்டர் விஜயசங்கர் பரமானந்தம், டாக்டர் அரவிந்த் சுகுமாரன் மற்றும் அவர்களது குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இயக்கக் குறைபாடுகள் சார்ந்த நரம்பியல் மற்றும் செயல்சார் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில், மேம்பட்ட சர்வதேச சிறப்புப் பயிற்சி (Fellowship) பெற்ற மருத்துவ நிபுணர்களால் இத்திட்டம் வழிநடத்தப்படுகிறது.

பார்க்கின்சன் நோய்:

சமீபத்திய பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வு ஒன்று, இந்தியாவில் பார்க்கின்சன் நோயின் அதிகரித்து வரும் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2050-ஆம் ஆண்டில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் (2.3–3.5 மில்லியன் வரை) இந்த நோயுடன் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், உலகளாவிய பாதிப்புகளில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. 

தெற்காசியா ஒட்டுமொத்தமாக சுமார் 6.8 மில்லியன் பாதிப்புகளுக்குப் பங்களிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில், பார்க்கின்சன் நோயாளிகளின் எண்ணிக்கை 25.2 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது—இது 2021-ஆம் ஆண்டு நிலைகளை விட 112% அதிகமாகும்—இதில் இந்தியாவில் மட்டும் 160–180% அதிகரிப்பு காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய பாதிப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 267 ஆக உள்ளது.

மூளை ஆழத்தூண்டல்:

2026 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி டாக்டர் விஜயசங்கர் பரமனந்தம், டாக்டர் அரவிந்த் சுகுமாரன் மற்றும் அவர்களது அணியால் தொடங்கப்பட்ட இந்த குறிப்பிடத்தக்க சாதனை, இயக்கக் குறைபாடுகள் மற்றும் செயல்நரம்பியல் அறுவை சிகிச்சை துறைகளில் மருத்துவமனையின் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘மூளை ஆழத் தூண்டல் (Deep Brain Stimulation - DBS)’ திட்டத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தியது. இந்த புதிய மாற்றம்  சிகிச்சை நோயாளியின் எதிர்வினையை மதிப்பிடுவதற்கான மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ கண்காணிப்பு காலத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

 அடாப்டிவ் DBS:

பாரம்பரிய டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (DBS) முறையானது, தகுந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து மின்தூண்டுதலை வழங்குவதன் மூலம் சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடாப்டிவ் DBS (aDBS) இதை மேலும் துல்லியமாக்கி, நோயாளியின் சொந்த மூளைச் சிக்னல்களின் அடிப்படையில் நேரடியாக தூண்டுதலை மாற்றும் பதிலளிக்கும் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. 

இந்த அணுகுமுறை, Medtronic போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய சென்சிங் திறன் கொண்ட நியூரோஸ்டிமுலேஷன் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது; இதன் மூலம், ஒரு நாளில் ஏற்படும் அறிகுறி மாற்றங்களுக்கு ஏற்ப சிகிச்சையை மேலும் பொருந்துமாறு ஒழுங்குபடுத்த முடிகிறது.

தர மேம்பாடு:

“அடாப்டிவ் DBS என்பது பார்கின்சன்ஸ் சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்,” என்று சென்னை கிரீம்ஸ் லேன் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணரும் இயக்கக் குறைபாடுகள் மற்றும் DBS சிறப்பு மருத்துவருமான டாக்டர் விஜயசங்கர் பரமானந்தம் தெரிவித்தார். “அடாப்டிவ் DBS, பாரம்பரிய தொடர்ந்து செயல்படும் DBS சிகிச்சையிலிருந்து அடுத்த முக்கிய முன்னேற்றமாகும் என்றார்.

மூளையின் தனித்துவமான மின்சாரச் சிக்னல்களை செயலில் கண்காணிப்பதன் மூலம், இந்த அமைப்பு உடனுக்குடன் பதிலளித்து, தேவையான நேரத்தில் துல்லியமான அளவு தூண்டுதலை வழங்குகிறது. இதன் மூலம் கணிக்க முடியாத அறிகுறி மாற்றங்களை சீராக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது; மேலும் உண்மையான தனிநபருக்கேற்ப DBS சிகிச்சைக்கான பாதையை நம்மை மேலும் நெருக்கமாக கொண்டு செல்கிறது.

எந்தவொரு புதிய தொழில்நுட்பத்திலும், நோயாளியின் நலனே முக்கியமானது," என்று சென்னை, கிரீம்ஸ் லேனில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் கூறினார். 

"செயல்படுத்துதல், நிரலாக்கம் மற்றும் ஒரு மாத கால மருத்துவப் பின்தொடர்வுக்குப் பிறகு, நாள் முழுவதும் நிலைத்தன்மையின் அடிப்படையில் ஊக்கமளிக்கும் ஆரம்பகட்டப் பலனை நாங்கள் கண்டோம். . பார்கின்சன்ஸ் நோயில், அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்துவது மிகச் சவாலான பகுதியாக இருக்கும் நிலையில், இது ஒரு முக்கியமான விளைவாகும்.”62 வயதுடைய ஆண் நோயாளியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தெரிவித்தார். “ஒரு நாளின் முழுவதும் நான் மேலும் நிலைத்தன்மையுடன் இருப்பதாக உணர்கிறேன்; இது என் அன்றாட வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

நரம்பியல் குறைபாடு:

பார்கின்சன்ஸ் நோய் என்பது முன்னேறும் தன்மை கொண்ட நரம்பியல் குறைபாடாகும்; இது உடல் இயக்கம், தன்னிறைவு மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. இந்நோயுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களும், பல வகையான மருந்துகளைச் சார்ந்திருப்பவர்களும், குறிப்பிடத்தக்க அளவிலான "செயலற்ற காலங்களை" (off periods) அல்லது தன்னிச்சையற்ற உடல் அசைவுகளை (dyskinesias) அனுபவிப்பவர்களும், DBS போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகளுக்காக உரிய நேரத்தில் பரிந்துரைக்கப்படுவதன் மூலம் பயனடையலாம்.

உலக பார்க்கின்சன் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 அன்று கடைப்பிடிக்கப்படும் உலக பார்கின்சன்ஸ் தினம், அதிக விழிப்புணர்வு, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மேம்பட்ட அணுகல் தேவையை வலியுறுத்துகிறது. இந்த முன்னேற்றம், இந்தியாவில் பார்கின்சன்ஸ் மேலாண்மையில் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை தீர்க்க, உடலியல் அடிப்படையில் வழிகாட்டப்படும் நவீன சிகிச்சைகளின் அதிகரித்துவரும் பங்கைக் காட்டுகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:

1983-ஆம் ஆண்டு சென்னையில் தனது முதல் மருத்துவமனையை டாக்டர் பிரதாப் ரெட்டி தொடங்கியபோது, ​​அப்போலோ நிறுவனம் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, 76 மருத்துவமனைகளில் அமைந்துள்ள 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264 மருத்துவ நிலையங்கள், 2,182 நோய் கண்டறிதல் மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைமருத்துவ மையங்களுடன், அப்போலோ உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவைகளை வழங்கும் தளமாகத் திகழ்கிறது.

3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள அப்போலோ, உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 ஊழியர்களைக் கொண்ட பெரும் குடும்பம், மிகச்சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், நாம் வாழும் இவ்வுலகை நாம் பெற்றதை விடச் சிறந்ததாக மாற்றியமைப்பதிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Embed widget