Brain Hemorrhage: மூளை ரத்தக்கசிவு ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? சிகிச்சை என்ன?
மூளை ரத்தக்கசிவு என்பதும் ஒருவிதமான பக்கவாதமே. இது மூளையின் ஒரு ரத்தக்குழாய் வெடிப்பதால் அந்த இடத்திலும் அதை சுத்தியுள்ள திசுக்களிலும் ரத்தக் கசிவை உண்டாக்கும்.
மூளை ரத்தக்கசிவு என்பதும் ஒருவிதமான பக்கவாதமே. இது மூளையின் ஒரு ரத்தக்குழாய் வெடிப்பதால் அந்த இடத்திலும் அதை சுத்தியுள்ள திசுக்களிலும் ரத்தக் கசிவை உண்டாக்கும். இது மூளை செல்களை அழித்துவிடும். இதை cerebral hemorrhages, intracranial hemorrhages, intracerebral hemorrhage என்றும் சொல்கின்றனர். இந்தவகை ரத்தக் கசிவால் தான் 13 சதவீத பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மூளையில் ஏன் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?
தலையில் ஏற்படும் பலத்த காயம் தான் மூளை ரத்தக்கசிவுக்கு முதல் காரணமாக இருக்கிறது. 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு மூளை ரத்தக்கசிவுக்கான காரணம் இதுவாகவே இருக்கிறது.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அது நாள்பட்ட ரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் மூளையில் ரத்தக்கசிவை உண்டாக்குகிறது.
அன்யூரிஸம்: அன்யூரிஸம் என்பது ரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்யும் ஒருவகை வீக்க நோய். இது ஏற்பட்டால் ரத்த நாளங்கள் வெடித்து மூளையில் ரத்தக் கசிவை உண்டாக்கி பக்க வாதத்தை ஏற்படுத்தும்.
அமிலாய்ட் ஆஞ்சியோபதி: இது வயது மூப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படுகிறது. சில நேரங்களில் பிறவியிலேயே சில ரத்த நாளங்கள் வலுவிழந்து இருக்கலாம். அவை பின்னாளில் ஏதேனும் அறிகுறி காட்டும்போதே தெரியவரும்.
ரத்த சம்பந்தமான நோய்கள்: ஹீமோஃபீலியா அல்லது சிக்கில்செல் அனீமியா ஆகியன ரத்தத்தில் ப்ளேட்ளெட்ஸ் அளவை குறைக்கும். அதுபோல் ப்ளட் தின்னர்ஸும் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
கல்லீரல் நோய்கள்: கல்லீரல் நோய்களால் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்படும்.
ரத்தக் கசிவு அறிகுறிகள் என்ன?
ரத்தக்கசிவின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது மூளையில் எந்த இடத்தில் ரத்தம் கசிகிறது எவ்வளவு கசிந்துள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.
சில அறிகுறிகள் மிகவும் அபாயமானவை
திடீர் தீவிர தலைவலி
திடீர் வலிப்பு
கை, கால்களில் தளர்ச்சி
குமட்டல், வாந்தி
மந்தநிலை
பார்வையில் குறைபாடு
மரத்துப்போதல், கூச்சம் ஏற்படுதல்
பேசுவதில் சிக்கல். பேச்சை புரிந்துகொள்வதில் சிக்கல்
உணவை விழுங்குவதில் சிக்கல்
எழுதுதல், வாசித்தலில் சிக்கல்
கைகள் உதறுதல்
சுவையறிதலில் தடுமாற்றம்
மூர்ச்சையடைதல்
மேலே கூறியுள்ள அறிகுறிகள் ஏற்பட்டால் ரத்தக்கசிவின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
மூளை ரத்தக்கசிவு வகைகள் என்னென்ன?
மூளை ரத்தக்கசிவு மூளை திசுக்களுக்கு உள்ளேயும் ஏற்படலாம் வெளியேயும் ஏற்படலாம். வெளியே ஏற்படும்போது அது மூளையைப் பாதுகாக்கும் மெம்ப்ரேன்களையும் சேர்த்து பாதிக்கிறது.
மூளை ரத்தக்கசிவுக்கு சிகிச்சை என்ன?
மூளை ரத்தக்கசிவை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலமே உறுதி செய்கின்றனர். சிலருக்கு வீக்கத்தை தணிக்க, ரத்தக்கசிவை நிறுத்த அறுவை சிகிச்சை அவசியமாகும். அப்படி தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிலருக்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்படும். கார்டிகோஸ்டீராய்ட்ஸ், ஆஸ்மோடிக்ஸ் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு வலிப்பு நோய் தடுப்பு மருந்துகள் தரப்படும்.
மூளை ரத்தக்கசிவை எப்படித் தவிர்க்கலாம்?
உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை தொடங்குங்கள்.
சிகரெட் புகைக்காதீர்கள்.
போதை வஸ்துகளைத் தொடவே தொடாதீர்கள். கோக்கைன் போன்ற போதைப் பொருட்கள் விரைவில் ரத்தக்கசிவை உண்டாக்கும்.
வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள். எப்போதும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்.
மோட்டார் சைக்கிள், மிதிவண்டி, ஸ்கேட்போர்டு என எதை ஓட்டினாலும் தலைக்கவசம் அவசியம்.
சில ரத்தநாள பிரச்சினைகளை அறிந்தால் உடனே அதனை சீர் செய்யும் கரெக்டிவ் சர்ஜரி செய்து கொள்ளுங்கள்
ரத்த அடர்த்தியை குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை.
மேலும் படிக்க: Bombay Jayashri Health: மூளையில் ரத்தக்கசிவு.... மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ! சோகத்தில் ரசிகர்கள்..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )