மேலும் அறிய

வெறும் 30 விநாடிகள்.. காலையில் பின்னோக்கி நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பின்னோக்கி நடப்பது உடலை நிமிர்ந்து நிற்க உதவுகிறது. குறிப்பாக கூன் விழும் சூழலில் இருப்பவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும். பிட்டத்தசைகளும் இடுப்புத் தசைகளும் வலுப்பெற்று நரம்பு மண்டலமும் தூண்டப்படுகிறது.

உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்குப் பல நன்மைகளைத் தரும் உடற்பயிற்சிகளில் ஒன்றான பின்னோக்கி நடத்தல் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் நாம் காணலாம். 

நாம் அனைவருமே உடல்நலத்தை பேண நினைக்கிறோம். தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, வீட்டில் அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, யோகா, சத்தான உணவுக்ளை எடுப்பது என பலவகைகளை நாம் பின்பற்றுகிறோம். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பலன்களை தரும் என்றாலும் தினமும் காலையில் எழுந்தவுடன் 30 விநாடிகள் பின்னோக்கி நடப்பது, உடலுக்கும் மூளைக்கும் பெரும் நன்மைகளைத் தரும் என சொல்லப்படுகிறது. 

இது வேடிக்கையாக தோன்றினாலும் இதன் அருமை யாருக்கும் தெரியவில்லை என பலரும் சொல்கின்றனர். பின்னோக்கி நடப்பது பலருக்கும் கடினமாகவும் அசௌகரியமாகவும் தோன்றினாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் இதனால் ஏற்படும் மாற்றங்களை நாம் காண முடியும் என பலரும் தெரிவிக்கின்றனர். 

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

முன்னோக்கி நடப்பது போல பின்னோக்கி வேகமாக நடக்க முடியாது. நமக்கு பொறுமையும், உடல் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மேம்படுத்தப்படுகிறது. உடல் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கிறது. மாறுபட்டு இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது தொடை பின்பக்கத் தசைகள், கெண்டைக்கால் தசைகள் போன்றவை அதிக செயல்பாட்டுடன் இருக்கிறது. இதனால் இடுப்புக்கு கீழ்ப்பகுதி வலிமை அதிகரிக்கிறது. 

மருந்து அல்லது அறுவை சிகிச்சை அல்லாத இயன்முறை சிகிச்சையில் பின்னோக்கி நடப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. இது முழங்கால்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து  மூட்டுகளின் இயக்கத்தன்மையை அதிகரிக்கிறது. இதன்மூலம் கீல்வாதப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

பின்னோக்கி நடப்பதால் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதயத் துடிப்பு வேகமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல பலன்களைத் தரும் என சொல்லப்படுகிறது. பின்னோக்கி நடப்பது ஒரு வழக்கமான தருணமாக இல்லாததால் மூளை அதிகமாக செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்படுகிறது. கவனச்சிதறல் தடுக்கப்பட்டு எதிர்வினை ஆற்றும் நேரம் துரிதமாகிறது. இதனை காலையில் செய்வது அன்றைய நாளை சுறுசுறுப்பாக இயங்க கைகொடுக்கும். 

பின்னோக்கி நடப்பது உடலை நிமிர்ந்து நிற்க உதவுகிறது. குறிப்பாக கூன் விழும் சூழலில் இருப்பவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும். பிட்டத்தசைகளும் இடுப்புத் தசைகளும் வலுப்பெற்று நரம்பு மண்டலமும் தூண்டப்படுகிறது. உங்கள் மூளை புத்துணர்ச்சி பெறுவதால் மன அழுத்தம், மன சோர்வு போன்றவை சரியாகும். வெறும் 30 வினாடிகள் கூட இந்த பயிற்சியைப் பெற நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

ஒருவேளை நீங்கள் பின்னோக்கி நடக்க விரும்பினால் ஒரு வெற்று இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் மெதுவாக நடக்கத் தொடங்குங்கள். கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே செய்யக்கூடாது. பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது. 30 வினாடிகளுடன் தொடங்கி படிப்படியாக நேரம் அதிகரிக்கலாம். வாரத்திற்கு 4-5 நாட்கள் இதைச் செய்வது போதுமானது. 

(இவை அனைத்தும் உடற்பயிற்சி பற்றிய தகவல்கள் மட்டும் தான். மேலும் தகவல்களுக்கு தகுதிவாய்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் மேற்கொள்ளவும். இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget