இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சமீப காலமாக வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர்

உறக்கமின்மை காரணமாக உடல்நலத்திலும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போன் லேப்டாப் மற்றும் டிவியை பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

படுக்கையறையில் அமைதி, இருள் மற்றும் குளிர்ச்சியை பராமரிக்கவும். தேவைப்பட்டால் கண் முகமூடி பயன்படுத்தவும்.

மாலை நேரத்திற்குப் பிறகு தேநீர், காபி அல்லது அதிக காரமான உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தியானம் அல்லது லேசான நீட்சிப் பயிற்சிகள் விரைவில் தூக்கம் வர மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரை உட்கொள்ளுதல் போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்.