மேலும் அறிய

Fact Check: கர்நாடக வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு மட்டுமே ஆதரவா? வைரலாகும் வீடியோ உண்மையா?

Fact Check: கர்நாடகாவின் அனைத்து வாக்காளர்களுமே பிரதமர் மோடிக்கே ஆதரவு என்பது போன்ற, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Fact Check: கர்நாடகா வாக்களர்கள் பிரதமர் மோடிக்கே ஆதரவு என்பது போன்ற, வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

வீடியோ சொல்வது என்ன?

கர்நாடகாவில் வரும் 26ம் தேதி இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, இந்தியா டுடேயின் செய்தி தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய், கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அவர்களது வாக்கு யாருக்கு என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக "மோடி மற்றும் சித்தராமையா வழங்கும் உத்தரவாதங்கள் தொடர்பாகவும் வினவியுள்ளார். அதற்கு பதிலளித்தவர்களில்  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மாநில நலன்களை விட,  பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியை விரும்புவதாகவே பலரது கருத்துகள் இடம்பெற்றுள்ளன.  இதை குறிப்பிட்டு கர்நாடகா வாக்காளர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கே ஆதரவு என பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  ஆனால், உண்மை என்னவென்றால் அந்த வீடியோவில் சித்தராமையாவிற்கு ஆதரவான கருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

வைரலான வீடியோவை கூகுளில் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்த்ததில், கடந்த  ஏப்ரல் 16ம் தேதி இந்தியா டுடேயின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியான வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் கர்நாடகாவில் மோடி Vs சித்தராமையா என்ற ஆறு நிமிட வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது.  

அந்த வீடியோவில், ”முதல் பெண் பேசும் போது ​​இலவச பேருந்து பயணத்தில் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறார். இரண்டாவது பெண்  பேசும்போது, சித்தராமையா பண பலன்கள், இலவச பேருந்து பயணம், மின்சாரக் கட்டணத்தையும் குறைத்ததால் அவருக்கு வாக்களிப்பதாக பேசுகிறார். சித்தராமையாவின் அரசாங்கத்திற்கு அவர் ஆதரவளிப்பதைச் சுற்றியுள்ளவர்கள் ஒப்புக்கொள்வதைக் கேட்கலாம். வீடியோவில் உள்ள மூன்றாவது பெண் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாகவும் குறிப்பிடுகிறார். 

அதைதொடர்ந்து பேசுபவர் தான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்.  அதை வீடியோவில் சுமார் 2:00 நிமிடங்களில் பார்க்கலாம். அதைத் தொடர்ந்து, வீடியோவில் உள்ள மற்றவர்களும் மோடிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். வீடியோவின் முடிவில், 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) (JDS) கட்சிக்கு ஒருவர் ஆதரவளிப்பதைக் கேட்கலாம். சித்தராமையாவின் இலவசப் பலன்கள் நல்லதுதான், ஆனால் தேசப் பாதுகாப்பிற்கு மோடி தேவை என பொதுமக்களிடமிருந்து கலவையான கருத்துகளையும்” அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

சர்தேசாய் விளக்கம்:

ஒருதலைபட்சமாக தனது வீடியோ வைரலானதை தொடர்ந்து, சர்தேசாய் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில்,  "கர்நாடகாவில் ஒரு பேருந்தில் நாங்கள் செய்த ஒரு நிகழ்ச்சியின் வீடியோவை பாஜக ஐடி செல் எடிட் செய்துள்ளது! ஆம், பிரதமர் மோடி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானவர், ஆனால் நேர்மையானவர். உங்கள் அரசியல் செயல்திட்டத்திற்காக #ElectionsOnMyPlate இல் இருந்து ஒரு கிளிப்பை நீங்கள் திருத்த வேண்டாம். முதலமைச்சர் சித்தராமையாவை ஆதரித்த குரல்களையும் ஏன் காட்டக்கூடாது? அல்லது அரசியலில் இது நியாயமா? ” என சர்தேசாய் குறிப்பிட்டுள்ளார். 

தீர்ப்பு:

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகிய இருவரில் யாரையாவது தேர்வு செய்யுமாறு மக்களிடம் கேட்டபோது, ​​கலவையான கருத்துகள் பெறப்பட்டன. இருப்பினும், கர்நாடக முதலமைச்சருக்கு ஆதரவான கருத்துகளை நீக்கிவிட்டு,  அனைவரும் மோடியை மட்டும் ஆதரிப்பதாக வீடியோ தவறாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 

also read: Did all Karnataka voters speak in favor of PM Narendra Modi? No, this news clip is edited

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts.com என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, தமிழ் வாசகர்களுக்கு ஏற்ப ABP Nadu-வால் இந்த செய்தி தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget