Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி காலில் விழுந்த மயில்வாகனம்.. சம்மதிக்க வைக்க போராடும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
ராஜராஜன் சாமியாட சாமுண்டீஸ்வரி ஒத்துக்கொள்ள மறுக்கும் நிலையில், கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போட்டி நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காலில் விழுந்து பெண் கேட்ட மயில்வாகனம்:
அதாவது, இந்த போட்டிக்கு நடுவே மயில் வாகனம் எப்படி ரோகினியை பொண்ணு கேட்டு வந்தார் என்ற பிளாஷ்பேக் காட்சி ஓப்பனாகிறது. பொண்ணு பார்க்க வந்த இடத்தில் பெண்ணை காட்டுவதற்கு முன்பாக சாமுண்டீஸ்வரி இந்த வீட்டுக்கு நீ சில கண்டிஷன் இருக்கு என்று சொல்ல மயில் வாகனம் எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் என்று காலில் விழுந்து பொண்ணு கேட்டது தெரிய வருகிறது.
அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய ஆட்கள் வருகின்றனர். கார்த்திக் எந்தெந்த இடத்தில் பொருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க மயில்வாகனம் ஒரு இடத்தை காட்டி அங்கு மட்டும் பொருத்த வேண்டாம், அத்தைக்கு தெரியாமல் நாங்க அங்க வந்து தான் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருப்போம் என்று சொல்கிறான்.
சந்திரகலாவை அடக்கிய சாமுண்டீஸ்வரி:
பிறகு சிசிடிவி கேமராவுக்கான ஹார்ட் டிஸ்க்கை மட்டும் எங்கு வைப்பது? ரகசியமான ஒரு இடத்தில் தான் வைக்க வேண்டும் என்று சொல்ல சந்திரகலா வரவர உன்னுடைய ராஜியம் அதிகமாயிட்டே போகிறது இன்று சத்தம் போட சாமுண்டீஸ்வரி எதுவும் கேட்காத என்று சொல்கிறாள்.
அதன் பிறகு கோவிலில் சாமியாடி, ராஜராஜன் தான் இந்த முறை சாமியாட வேண்டும் என்று வாக்கு கொடுக்கிறார். இந்த விஷயத்தை ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்த சாமுண்டீஸ்வரி என் புருஷனை கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுப்புவேன் ஆனால் சாமியாட சம்மதிக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.
சம்மதிக்க வைக்க முயற்சி:
இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சியாக கார்த்திக் சாமுண்டீஸ்வரி சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















