Taapsee on woman Cricketer | கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர் நீங்கள்தான் ! பிரபல கிரிக்கெட் வீராங்கனையை புகழ்ந்த நடிகை டாப்ஸி...
கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர் நீங்கள்தான் என்று நடிகை டாப்ஸி பிரபல கிரிக்கெட் வீராங்கனையை புகழ்ந்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையும், 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சமீபத்தில் படைத்தார். தொடர்ந்து, இந்திய பெண்கள் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். இந்த சூழலில், இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சபாஷ் மிது' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ‘சபாஷ் மிது’ திரைப்படத்தை ராகுல் தொலாகியா இயக்க, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடித்து வருகிறார். ஏற்கனவே, நடிகை டாப்சி இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் போன்று கதாபாத்திரம் ஏற்று அதற்கான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நேற்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜூக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
Just by hearing this exhaustingly long introduction of her accolades I feel she actually deserve a series made on her n not just a film 😁 so so inspiring @M_Raj03 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾#WomanInBlue 🙏🏽 #KhelRatnaAward pic.twitter.com/PszJZXKbIi
— taapsee pannu (@taapsee) November 13, 2021
இதையடுத்து, கேல்ரத்னா விருதுக்கு தகுதியானவர் நீங்கள் தான் நடிகை டாப்ஸி இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜுவை புகழ்ந்துள்ளார். இதுகுறித்து நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் மித்தாலி ராஜு கேல்ரத்னா விருது வாங்கும் வீடியோவை பதிவிட்டு, தற்போது தான் விருது வாங்கும் செய்தியை அறிந்தேன். உண்மையில் இந்த விருதிற்கு நீங்கள் தகுதியானவர்கள் தான். உங்கள் சிரித்த முகம் எப்பொழுதும் பலரை ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நடிகை டாப்சியின் இந்த ட்விட்டர் பதிவை சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்