மேலும் அறிய

ஷாருக்கானுடன் மீண்டும் யோகி பாபு.. வீரப்பன் கஜானாவுக்கு வேற பெயரா? யோகி அப்டேட்ஸ்..

வடிவேலுவின் வெற்றிடம் பல இளம் காமெடி நடிகர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. அவர்களுள் யோகி பாபுவும் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகருள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு(Yogi babu). தற்போது பல ஸ்டார்டம் வேல்யூ கொண்ட நடிகர்களின் படங்களுக்கு யோகி பாபுவை கமிட் செய்ய வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காம்போவில் பெயர் வைக்கப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் யோகிபாபு சிறிய வேடத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அப்போது அவர் ஷாருக்கானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கூட இணையத்தை கலக்கின. இந்நிலையில் யோகிபாபு  ஷாருக்கானுடன் மீண்டும் இணைய உள்ளார். ஆனால் இம்முறை முழுநேர காமெடியனாக வலம் வர உள்ளார்.


ஷாருக்கானுடன் மீண்டும் யோகி பாபு.. வீரப்பன் கஜானாவுக்கு வேற பெயரா? யோகி அப்டேட்ஸ்..
வடிவேலுவின் வெற்றிடம் பல இளம் காமெடி நடிகர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. அவர்களுள் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக காத்துருக்கின்றனர், அதே சமயம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் , சில படங்களில் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக  தர்ம பிரபு, மண்டேலா  போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின், தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரீமேக் வெளியீட்டு உரிமையை தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். மேலும் படத்தை இயக்கவும் செய்கிறார். படத்தில் கதாநாயகனாக தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தில் காமெடியனாக நடிக்கும் யோகி பாபு படத்திற்கான தன்னுடைய டப்பிங் போர்ஷனை முடித்துக்கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


ஷாருக்கானுடன் மீண்டும் யோகி பாபு.. வீரப்பன் கஜானாவுக்கு வேற பெயரா? யோகி அப்டேட்ஸ்..

இது தவிர காடுகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மையமாக வைத்து யாசின் இயக்கத்தில் பிரபாதீஸ் சாம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த படம் நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் யோகி பாபுவுடன் மொட்டை ராஜேந்தர் நடித்து வருகிறார். முன்னதாக படத்திற்கு ‘ வீரப்பனின் கஜானா’ என பெயர் வைத்திருந்தனர் படக்குழு. இந்நிலையில் அந்த பெயரை மாற்றுமாறு சந்தன கடத்தல் வீரப்பனின் குடும்பத்தினர் படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெயரை மாற்ற படக்குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படத்திற்கு வேறு பெயர் வைக்கப்பட்டு, படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget