மேலும் அறிய

"ஏன் என்னை ஏதோ செய்தாய்" - பத்திரிகையாளர் சந்திப்பு

Anthony's Atelier நிறுவனம் தயாரிக்கும், டி. ஆண்டனி எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் "ஏன் என்னை ஏதோ செய்தாய்" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது

Anthony's Atelier நிறுவனம் தயாரிக்கும், டி. ஆண்டனி எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் "ஏன் என்னை ஏதோ செய்தாய்". மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர் நண்பர்களை சந்தித்து கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் கதாநாயகி மதுமிதா தாஸ் பேசுகையில், தன்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் ஆண்டனிக்கும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன், ஜெய்கார் ஹரிநாத் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது சவாலாகவும் சிறப்பான அனுபவமாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். ஜீவா ரவி, நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் தனக்கு பெரும் பலமாக இருந்ததாகவும், தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், தனஞ்செயனுக்கும் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் டி. ஆண்டனி பேசுகையில், தயாரிப்பு பணிகளில் உதவிய ஹரிஷ், சந்தோஷ், விஜய் ஆகியோரையும் நினைவுகூர்ந்தார். 18 நாட்கள் பட்டறை பயிற்சி எடுத்த மதுமிதாவின் அர்ப்பணிப்பையும், ஜீவா ரவியின் தந்தை போன்ற ஆதரவையும், கலை இயக்குநர் சுரேந்தரனின் பங்களிப்பையும், ஜெய்கார் ஹரிநாத்தின் லைவ் சவுண்ட் பணியையும் அவர் பாராட்டினார். படத்தின் தலைப்பை கார்த்திக் நேத்தா அளித்ததாகவும், இணை இயக்குநர் ஜேனட் தொடக்கம் முதல் ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்தார். விநியோக பிரச்சனையை தனஞ்செயன் உடனடியாக தீர்த்து வைத்ததால் இந்தப் படம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், படத்தின் போஸ்டரைப் பார்த்தே தானாக முன்வந்து இப்படத்துடன் இணைந்ததாகவும், குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும் இது ஒரு அழகான கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். சிங்க் சவுண்டில் டப்பிங் இல்லாமல் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது எனவும், சிறு பட்ஜெட் படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம், மற்றும் 8 வாரங்கள் ஆன படங்களை ஓடிடி தளங்கள் வாங்காத பிரச்சனை குறித்தும் அவர் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் தலையீட்டுடன் தொழில்துறையை பாதிக்காத வகையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். படம் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளரும் இளைஞன் ஒருவன் மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிப்பதையும், அவன் வாழ்க்கையில் நுழையும் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி அழைத்துச் செல்வதையும் மையக்கருவாகக் கொண்டுள்ளது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ராஜேந்திரன் சிங், மாதங்கி ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget