மேலும் அறிய

Yashoda Samantha: ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் சமந்தா... யசோதா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது.

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்  தயாரிப்பில் உருவாகி வரும்  ‘யசோதா’ படத்தின் மேக்கிங் காட்சி வெளியாகி இருக்கிறது. 

 

                                               

நடிகை சமந்தா நடிப்பில் இயக்குநர்கள் ஹரிஹரிஷ் இயக்கியுள்ள திரைப்படம் யசோதா. இந்தப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம், முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

 

                                             

அதன்படி ட்ரெய்லர் வெளியாகி  சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில், சமந்தா ஆக்‌ஷன் தொடர்பான காட்சிகளில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசி இருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பில், சமந்தா ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபடுவது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஹாலிவுட் சண்டை இயக்குநர் யானிக் பென் சமந்தாவுக்கு பயிற்சி கொடுப்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் யானிக் பென் சமந்தாவுடன் பணியாற்றியது குறித்து பேசி இருக்கிறார். 


Yashoda Samantha: ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் சமந்தா... யசோதா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

அவர் பேசும் போது, “ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால்  நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே, இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது.” என்று பேசியுள்ளார். இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். 

ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார். அண்மையில் சமந்தா தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு, இன்ஸ்டாகிராம் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget