பல பெண்கள்.. 16 வயதில் ரெஸ்டே இல்லாமல் செக்ஸ் - வெளிப்படையாக பேசிய நடிகர் வில் ஸ்மித்!
வில் ஸ்மித் சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை ஒரு புதிய நினைவுக் குறிப்பில் 16 வயதில் தான் அதிக உடலுறவில் ஈடுபட்டதாகவும், அது அவரை அதிகம் நோய்வாய்ப்பட செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வில் ஸ்மித் தனது ரசிகர்கள் மற்றும் பாலோயர்களுக்கு தனது வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக நிறைய விஷயங்களை சொல்லி வருகிறார். மிக சமீபத்தில், நடிகர் தனது நினைவுகளை புதிய நினைவுக் குறிப்பான 'வில்' என்னும் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்பு புத்தகம், 16 வயதில் வில்லின் முதல் பிரேக் அப்-இற்கு பிறகு, அவர் அதன் தாகத்தில் இருந்து மீள்வதற்காக 'தொடர்ச்சியான உடலுறவுக்கு' தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். வில் ஸ்மித் தனது வாழ்க்கையைப் பற்றி தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும், தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அவர் தற்போது தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிய பல விவரங்களுடன் ஒரு நினைவுக் குறிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது 16 வயதில் மெலனி என்ற பெண்ணுடன் உறவில் இருந்துபிரிந்த பிறகு, மீண்டு வருவதற்காக உடலுறவை பயன்படுத்தி உள்ளார்.
"எனக்கு மிகவும் நிவாரணம் தேவைப்பட்டது, ஆனால் இதய துடிப்புக்கு மாத்திரை இல்லாததால், ஷாப்பிங் செல்வது மற்றும் அடிக்கடி உடலுறவு போன்ற ஹோமியோபதி வைத்தியத்தை நான் நாடினேன்," என்று வில் ஸ்மித் கூறினார். அந்த நேரத்தில் அவர் "மெலனியைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் மட்டுமே உடலுறவு கொண்டார்" என்றும் அவர் இரண்டு வார இசைச் சுற்றுப்பயணத்திற்காக வெளியில் சென்று இருந்தபோது மெலனி தன்னை ஏமாற்றியதைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் பிரிந்ததாகவும் நடிகர் மேலும் வெளிப்படுத்தினார். "அடுத்த சில மாதங்களில், நான் கெட்டோ ஹைனாவுக்குச் சென்றேன். அங்கு நான் பல பெண்களுடன் ஓயாமல் உடலுறவு கொண்டேன், அது என் மன இருப்பை, அதன் கிளர்ச்சியை கட்டுப்படுத்த உதவியாக இருந்தது, நான் உடலுறவில் உச்சத்தை அடைவதற்கான மனோதத்துவ எதிர்வினையாக அதை பழக்கப்படுத்திக் கொண்டேன்," என்று அவர் எழுதியிருந்தார்.
மேலும், "உடலுறவு உண்மையில் என்னை வாந்தி வருவதுபோன்ற உணர்வை தரும், மற்றும் சில சமயங்களில் வாந்தி எடுத்தும் இருக்கிறேன்" என்று கூறினார். மேலும் "ஒவ்வொருமுறை உடலுறவு கொள்ள பெண்களை நாடும்போதும் நான் நம்புவேன், இந்த பெண் தான் என்னை காதல் செய்து, என்னோடு வாழ்க்கையில் இருந்து, என்னை இந்த வலியில் இருந்து மீட்டெடுப்பாள் என்று. ஆனால் அப்படி ஒருபோதும் நடக்கவே இல்லை" என்றும் எழுதியிருந்தார்.
வில் ஸ்மித் தற்போது கிங் ரிச்சர்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் ரிச்சர்ட் வில்லியம்ஸ் என்னும் கதாப்பாத்திரமான, டென்னிஸ் வீரர்களான வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸின் தந்தை மற்றும் பயிற்சியாளராக நடிக்கிறார். கிங் ரிச்சர்ட் படத்தை ரெனால்டோ மார்கஸ் கிரீன் இயக்கியுள்ளார்.