தளபதி 66
தளபதி 66 திரைப்படத்தின் அடுத்த இயக்குனர் யார் , மீண்டும் லோகேஷ் திரைப்படத்தை இயக்குவாரா ?
தளபதி 66
இளைய தளபதியின் மாஸ்டர் வெற்றிக்கு பின்னால் அடுத்ததாக என்ன படம் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கிறது. கடந்த பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு அழைத்து வந்தது. பாக்ஸ்ஆபீஸ் வெற்றி, 50ம் நாள் கொண்டாட்டம் , " வாத்தி கமிங் " ஒரு வருட கொண்டாட்டம் இது போன்ற அனைத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மாஸ்டர் திரைப்படம் .
அடுத்ததாக தளபதி 65 சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்ற புகைப்படம் இணையத்தளத்தில் மிக வைரலாக கொண்டாடப்பட்டது. அதன்பின்பு தளபதி 66 லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்கப்போகிறார் என்றும், தேனாண்டாள் மூவிஸ் தயாரிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவ தொடங்கின , எந்த அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை மற்றும் தளபதி 66 பேச்சு வார்த்தை மட்டுமே நடந்து கொண்டு இருக்கிறது என்று சில அதிகாரபூர்வ ட்விட்டர் டிவீட்கள் செய்திகள் வெளியாகி உள்ளன .
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thalapathy Vijay hasn't locked any new project other than his upcoming film with <a href="https://twitter.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@Nelsondilpkumar</a>. <a href="https://twitter.com/hashtag/Thalapathy66?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#Thalapathy66</a> talks are yet to begin, the ongoing reports are not true.</p>— Rajasekar (@sekartweets) <a href="https://twitter.com/sekartweets/status/1372411043071156228?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ரசிகர்களைப் போல நாமும் காத்திருப்போம் . #thalapathi66