Aishwarya Rai and Abhishek Bachchan: விவாகரத்துக்கு அபிஷேக் பச்சன் ஓகேவா? இடையில் புகுந்து குட்டையை குழப்பும் நடிகை...
Aishwarya Rai and Abhishek Bachchan : அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் உறவில் விரிசல் விழ காரணம் என்ன? வைரலாகும் தகவல்
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான தம்பதிகளான அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் குடும்பத்தில் என்ன நடந்தாலும் அது தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அவர்கள் குடும்ப உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக கலந்து கொண்டார். இது அவர்கள் குடும்பத்தில் இருக்கும் விரிசல் குறித்த கேள்விகளை எழுப்பியது. ஏற்கனவே அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து குறித்த சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான heenakhandlwal என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விவாகரத்து குறித்த போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த போஸ்டை நடிகர் அபிஷேக் பச்சன் லைக் செய்து இருந்தார். அதற்கு பலரும் அவரவர்களின் கருத்தை முன்வைத்து வந்தனர். அபிஷேக் பச்சன் இந்த போஸ்டுக்கு லைக் செய்து இருப்பது அவருக்கு விவாகரத்து செய்வதில் சம்மதம் என்பதை குறிக்கிறது என ஒரு சிலரும் அது பொதுவான 'லைக்' ஆக கூட இருக்கலாம். அதற்கும் அவரின் பர்சனல் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியாக ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விரிசல் பற்றி பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அமிதாப் பச்சன் அவருடைய ஜூஹு பிரதிக்சா பங்களாவை கடந்த ஆண்டு தான் மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசளித்தார். அந்த பங்களாவின் மதிப்பு ரூ.3,190 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அன்றில் இருந்து தான் குடும்பத்துக்குள் சிக்கல் ஆரம்பித்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு அபிஷேக் பச்சனுடன் மட்டுமின்றி மாமியார் நாத்தனார் உடனும் சரியான உறவுமுறை இல்லை என கூறப்படுகிறது.
பச்சன் குடும்பத்துக்குள் குழப்பம் விரிச்சலடைய நடிகை ஒருவர் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் - நடிகை ரேகா இருவருக்கும் இடையே நல்ல ஒரு பாண்ட் உள்ளது. அதன் வெளிப்பாடாக தான் அம்பானி இல்லத் திருமண விழாவில் கூட இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். இந்த நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்கிறது.
நடிகை ரேகா, அமிதாப் பச்சனின் முன்னாள் காதலி என்பதும் ஜெயா பச்சனுக்கும் ரேகாவுக்கு இடையே இருக்கும் மோதல் பற்றியும் பலருக்கும் தெரியும். தற்போது ஐஸ்வர்யா ராய் - ரேகா இடையே இருக்கும் நட்பு கூட பச்சன் குடும்பத்தில் விரிசல் வர காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.