Watch Video: ரீல் ராமர் ராம் சரணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த க்யூட் குரங்கு.. வைரலாகும் வீடியோ
அனுமான் ஜெயந்தியான இன்று ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் படம் வெளியான 16 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. முன்னதாக பாகுபலி 2 மற்றும் தங்கல் ஆகிய இரண்டு படங்கள் மட்டும் 1000 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அந்த வரிசையில் ஆர்.ஆர்.ஆர் படமும் இணைந்திருக்கிறது. இந்த சாதனையின் மூலம், பஜ்ரங்கி பைஜான், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பிகே உள்ளிட்ட படங்கள் வசூலித்த வசூலை முந்தி, அதிகம் வசூலித்த மூன்றாவது இந்தியப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது ஆர்.ஆர்.ஆர்.
1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்தனர்.
இரண்டு நடிகர்களுமே சிறப்பாக நடித்திருந்த நிலையில், இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அனுமான் ஜெயந்தியான இன்று ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ராம் சரணின் அறைக்குள் ஒரு குரங்கு வந்துவிடுகிறது. நிதானமாக இருந்த அந்த குரங்கிற்கு ராம் சரண் பிஸ்கட் அளிப்பது போன்ற இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண:
View this post on Instagram
மேலும், வீடியோவின் இறுதியில் அனுமான் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து முடித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்