மேலும் அறிய

''புருஷனுக்காக அம்மாவை தெருவில விடமுடியாது''.. விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய மகேஸ்வரி!

கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது அல்லவா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் விஜேவும் நடிகையுமான மகேஸ்வரி.

கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது அல்லவா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் விஜேவும் நடிகையுமான மகேஸ்வரி.

ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்த பிரபல பெண் தொகுப்பாளினியான திகழ்ந்தவர் மகேஸ்வரி.  இடையில் திருமணம் ஆனதால் மகேஸ்வரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார். அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.

அண்மையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர், நான் என் பணியை சன் மியூஸிக்கில் தான் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் லூசு மாதிரி இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 16 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எதுக்கெடுத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பேன்.  நான் லைவ் ஷோ செய்யும்போது நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். பொட்டு வைக்காததற்குக் கூட திட்டு வாங்கியிருக்கிறேன். சிரிப்பை கம்மி பண்ணுங்க என்று சொல்வார்கள். ஆனால் இப்போ மீடியா எனக்கு ரொம்ப சொல்லிக் கொடுத்திருக்கு. வாழ்க்கையும் தான். நான் என்றைக்குமே நான் ஒரு செலிப்ரிட்டி என்று நினைத்ததே இல்லை. அப்பா எங்களை விட்டுப் பிரிந்த பின்னர் எனக்கு வாழ்வாதாரமாகத் தான் இந்த வேலை இருந்தது.  சாப்பிடணுமே என்பதற்காகத் தான் நான் வேலைக்குச் சென்றேன்.


'புருஷனுக்காக அம்மாவை தெருவில விடமுடியாது''.. விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய மகேஸ்வரி!

எனக்கு திருமணம் ஆனதுகூட என் அறிவுணர்ந்து நடக்கவில்லை. எங்கே என்னை யாராவது ஏமாற்றிவிடுவார்களோ என்று அம்மா ஒருவரை திருமணம் செய்துவைத்தார். ஆனால் அவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை. முக்கியமாக நான் என் அம்மாவை கவனிக்கக் கூடாது என்றார்கள். ஒரு ஆண் திருமணத்திற்குப் பின் மனைவிக்காக அம்மாவை விட்டுக் கொடுப்பது எவ்வளவு பெரிய தவறோ அதேபோன்றதுதான் ஒரு பெண் தன் கணவருக்காக அம்மாவை விட்டுக் கொடுப்பதும். கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது அல்லவா. அதனால் விவகாரத்துப் பெற்றேன். இப்போது என் அம்மாவைப் போலவே சிங்கிள் மதராக வாழ்கிறேன்.

என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னுடைய பையன், என்னுடைய அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget