மேலும் அறிய

17 Years Of Thimiru: ’ஏலே இசுக்கு’ .. விஷாலுக்கு டஃப் கொடுத்த ஸ்ரேயா ரெட்டி.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த திமிரு..!

ஈஸ்வரி போன்ற கோபமான குணம் கொண்ட பெண்களை ஆண்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திமிரு படத்தை இந்த கண்ணோட்டத்தில் நீங்கள் யோசித்திருக்கிறீர்களா...

விஷால் , ரீமாசென், ஷ்ரேயா ரெட்டி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியானத் திரைப்படம் திமிரு. கடந்த 2006 ஆம் வருடம் வெளியான இந்தப் படத்தை தருண் கோபி இயக்கி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். செல்லமே , சண்டகோழி ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திமிரு படம் மூலமாக  தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார் விஷால். இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திமிரு படத்தில் விஷால் கணேஷ் என்ற கேரக்டரிலும், ஸ்ரேயா ரெட்டி ஈஸ்வரி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தனர். 

திமிரு

வழக்கமான ஹீரோ வில்லன் கதை தான் என்றாலும் இந்தப் படம் மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றதற்கு காரணம்  பெண் கதாபாத்திரம் இந்தப் படத்தில் வில்லனாக (ஈஸ்வரி ) இருந்தது என்பதால் தான். ஆனால் ஈஸ்வரியின் கதாபாத்திர வடிவமைப்பிற்கு பின் இருக்கும் காரணமும், ஈஸ்வரி கதாபாத்திரத்தின் குறை என்று கதாநாயகனான விஷால் சொல்லும் காரணங்களும் ஆண் ஆதிக்க மனோபாவத்தில் இருந்து பேசுவதாகவே இருக்கின்றன என்பதை ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போதும் விறுவிறுப்பானக் காட்சிகளின் ஓட்டத்தில் நாம் கவனிக்கத் தவறவிடுகிறோம்.

ஈஸ்வரி

17 Years Of Thimiru: ’ஏலே இசுக்கு’ .. விஷாலுக்கு டஃப் கொடுத்த ஸ்ரேயா ரெட்டி.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த திமிரு..!

முதலில்  ஈஸ்வரியின் கதாபாத்திரம் எந்த வகையில் ஆண்சார் சிந்தனைகளை கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். பல்வேறு ஆண்களை தனக்கு கீழ் கட்டுப்படுத்தி வருபவள் ஈஸ்வரி. கொடுத்த கடனை திருப்பி கொடுக்காமல் விட்டால் நடு ரோட்டில் நிறுத்தி அவமானப்படுத்தக் கூடியவள். ஆனால் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஈஸ்வரியின் கதாபாத்திரம் மற்ற பெண்களை நடத்தும் முறைகளை கவனித்தால் அதில் இருக்கும் ஆண் கருத்தாக்கங்கள் தெரியவரும். ஒருவரை அவமானப்படுத்த ஈஸ்வரி செய்வது அவர்கள் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்துவதும் பெண்களின் ஆடைகளை உருவுவதும் தான். இதையெல்லாம் செய்வது ஈஸ்வரியா ஈஸ்வரி கதாபாத்திரத்தை எழுதிய ஒரு ஆணின் பேனாவா என்கிற சந்தேகமே எழுகிறது

திமிர் பிடித்தப் பெண்களை சகித்துக்கொள்ளாத ஆண்கள்

17 Years Of Thimiru: ’ஏலே இசுக்கு’ .. விஷாலுக்கு டஃப் கொடுத்த ஸ்ரேயா ரெட்டி.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த திமிரு..!

என் பாட்டியுடன் திமிரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது கணேஷை திருமணம் செய்ய ஈஸ்வரியின் போராட்டத்தை கவனித்த என் பாட்டி சொன்னார். இவள் இவனிடம் நல்லவளாகத்தானே இருக்கிறாள். பேசாமல் கல்யாணம் பண்ணிருக்கலாமே “ என்று தான். ஒரு நொடி அட ஆமாம் என்று தான் தோன்றியது. உண்மையில் திமிரு படத்தில் ஈஸ்வரியின் கதாபாத்திரம் ஒரு ஆணுக்கு சவால் விடும் அளவிற்கு துணிச்சலான ஒரு கதாபாத்திரமாக அமைக்கப்பட்டு, பின் கதாநாயகன் அவளைத் திருமணம் செய்ய மறுப்பதன் மூலம் திமிரு பிடித்தப் பெண்களுக்கு இதுதான் நிலைமை என்கிற கருத்தாக்கத்தை நம் மனதில் பதிவு செய்கிறது.

ஒரு காட்சியில் தன்னிடம் என்ன குறை என்று ஈஸ்வரி கேட்கையில் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விஷால் வசனம் பேசுவார். ஆரம்பத்தில் துணிச்சலான ஒரு பெண்ணாக காட்டப்படும் ரீமாசென் கூட விஷாலுடன் இடம்பெறும் காட்சிகளில் லட்சனமாக காட்டுவதற்காக சாந்த சொரூபினியாக காட்டப்பட்டிருப்பார். வாழ்க்கையில் எல்லாவற்றின் மேலும் தனது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈஸ்வரி விஷால் ஒரு அடி கொடுத்ததும் அவன்மேல் காதல் வையப்பட்டு அவனுக்காக உயிரிழந்தும் போகிறார்.

ஒட்டுமொத்தமாக இன்று திமிரு படத்தைப் பார்க்கும்போது வழக்கமான பெண் குணாம்சங்கள் இல்லாத ஒரு பெண், பாரம்பரியமான ஒரு பெண்ணை எதிர்பார்க்கும் ஒரு ஆண் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கான மோதலாகவே தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget