மேலும் அறிய

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது பார்வையாளர்களை உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம்.

தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி - பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.

வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும் பாரம்பரியமும் சோதிக்கப்படும் அரங்குகளில், பாண்டிமுனி எதிர்பார்ப்புகளை முறியடித்து, மரியாதையை வென்று, உடைக்க முடியாத மனவலிமையின் சின்னமாக மாறுகிறது. இது வெற்றிகளைப் பற்றிய கதை மட்டுமல்ல — ஒற்றுமை, நம்பிக்கை, மனிதன் மற்றும் காளை இடையேயான உறவைப் பற்றிய கதை.

தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது.

விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.

விமல் கூறுகையில்

"இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது  அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது."

இயக்குனர் கேந்திரன் கூறுகையில்

"‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை."

நட்டி கூறுகையில்

"‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்."

டி. இமான் கூறுகையில்

"இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது."

‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது.  பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.

‘வடம்’ தற்போது சன் NXT-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது... காணுங்கள், எங்கேயும்... எப்போதும்...

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

Embed widget