மேலும் அறிய

Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்

'மன்னர் வகையறா' திரைப்படம் தொடர்பான நிதி விவகாரத்தில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபி, தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது

'மன்னர் வகையறா' திரைப்படம் தொடர்பான நிதி விவகாரத்தில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கு, திரைப்படத் தயாரிப்பாளர் அரசு பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோபி தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. 2018-ஆம் ஆண்டு விமல் நடித்து வெளியான 'மன்னர் வகையறா'  அரசு ஃபிலிம்ஸ் சார்பாக கோபி தயாரித்தார். தயாரிப்பாளர் கோபி தாக்கல் செய்த மனுவில், திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் விமலுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இதனால் தனக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த இழப்புக்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். நடிகர் விமல் பெற்றதாகக் கூறப்படும் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போதிய நிதி இல்லாத காரணத்தால் திரும்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் காசோலை மோசடி தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

ஆஜராகாத விமல்

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விமல் தரப்பின் விளக்கத்தையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பின் குற்றச்சாட்டுகள் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பான விவரங்கள் குறித்து நடிகர் விமல் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தேதிகளில் நடிகர் விமல் தொடர்ந்து ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறைக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவும் இதன் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பு நடிகர் விமல் மேல்முறையீடு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget