மேலும் அறிய

Dhruva Natchathiram: ”அவன் போறான் பிளைட்டுல, கையில இன்னும் மாட்டுல”.. துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ..!

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாக உள்ள இரண்டாவது பாடலுக்கான புரோமோவை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாக உள்ள இரண்டாவது பாடலுக்கான புரோமோவை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

புரோமோ வெளியீடு:

துருவநட்சத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள்ள ”His Name Is John” என்ற பாடலுக்கான புரோமோ இன்று வெளியாகும் எனவும், முழு பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் எனவும் அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்து இருந்தார். அதன்படி, காலை 11 மணியளவில் பாடலுக்கான புரோமோ வெளியாகியுள்ளது.

பாடல் வரிகள்.. 

20 விநாடிகள் ஓடும் அந்த புரோமோவில், துருவ நட்சத்திரம் படம் முழுமையாக ஆக்‌ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டது என்பதை உணர்த்தும் விதமாக துப்பாக்கிகள் கொண்டு டைட்டில் கார்ட் போடப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, ”அவன் போறா பிளைட்டுல, இப்ப பறந்துபுட்டான் ஐட்டுல, உன்ன போட போறான் காட்டுல, அவன் கையில இன்னும் நீ மாட்டல” என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. முழு பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் எனவும் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 

துருவ நட்சத்திரம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உள்ள கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு என எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்தார். இதையடுத்து,  கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடரும் ஏக்கம்..!

டீசரை தொடர்ந்து “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் பல ஆண்டுகள் கழித்து தான் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகுமா இல்லையா என குழம்பி தவித்தனர்.

தூசி தட்டப்படும் துருவ நட்சத்திரம்:

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் "His Name is John" ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, துர்வ நட்சத்திரம் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget