மேலும் அறிய

Vikraman | பூவே உனக்காக ஒரு உல்டா கதை... உங்களுக்கு தெரியுமா? -இயக்குநர் விக்ரமன் சுவாரஸ்ய பேட்டி!

ஓரிரு வருடங்களாகவே சில படங்களில் நடித்திருக்கிறார்  விஜய், ஆனாலும் தமிழ் சினிமா ஏன் இவரை அடையாளம் காணவில்லை என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சினிமாவில் பார்க்கும் காதல் கதைகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளும் அளவிற்கு படங்களை எடுப்பதில் வித்தைக்காரர் இயக்குநர் விக்ரமன். ஒரு செடியில் ஒரு பூதான் பூக்கும் என அவர் சொன்ன ஒற்றை வசனம் இன்றைக்கும் பல ஒன் சைட் காதல்களின் தாரக மந்திரமாகவே இருக்கிறது எனலாம். கடந்த 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்பம் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானால் நம்மில் எத்தனை பேர் இன்னும் அசையாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.  விஜய் வாழ்க்கையிலும் அந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படம் உருவான விதம் குறித்து இயக்குநர் விக்ரம் டிஜிட்டல் சேனல் ஒன்றிற்கு விவரித்துள்ளார்.

Vikraman | பூவே உனக்காக ஒரு உல்டா கதை... உங்களுக்கு தெரியுமா? -இயக்குநர் விக்ரமன் சுவாரஸ்ய பேட்டி!
இது குறித்து கூறிய அவர் “தயாரிப்பாளர் சௌத்திரி சாருக்கு முதல்ல கதை சொன்னேன்.. அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. யார் ஹீரோவா போடப்போறீங்க என கேட்டார். அப்போது பரிசீலனை செய்துக்கொண்டிருந்தோம். நிறைய பேர் நிறைய நடிகர்கள் பேரை சொன்னாலும் விஜயின் பெயரை யாருமே சொல்லவில்லை. இரண்டே சாட்டிலைட் சேனல்தான் அப்போது இருந்தது. அதில் ஒரு சேனலில் ஒருமுறை பாடல் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதில்  சின்னப்பையன் சின்னப்பொண்ண காதலிச்சான் என்னும் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதை விஜய் சொந்த குரலில் பாடியிருப்பார். நடனமெல்லாம் சூப்பரா ஆடியிருப்பார். அப்போதே நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். இவர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று. உடனே தயாரிப்பாளர் சௌத்ரி சாரிடம் சொன்னேன். அவர் தயங்கினார். சின்ன பையானா இருக்காரு, கொஞ்சம் மெச்சூரா இருந்தா நல்லா இருக்கும். கார்த்தி போல இருந்தா கரெக்டா இருக்குமே என்றார். ஆனால் நான் விஜய்தான் சரியாக இருப்பார் என்றேன்“ என்கிறார் விக்ரமன்.

Vikraman | பூவே உனக்காக ஒரு உல்டா கதை... உங்களுக்கு தெரியுமா? -இயக்குநர் விக்ரமன் சுவாரஸ்ய பேட்டி!

இது குறித்து மேலும் பேசிய அவர் “விஜய்க்கு அப்போது 20 வயது இருக்கும். துரு துருனு டான்ஸ்லாம் ஆடுறாரு. இப்படியான சின்ன பையன் காதலை விட்டுக்கொடுத்தாதான் சிறப்பாக ஆடியன்ஸ் மனதில் பதியும் என தயாரிப்பாளரை ஒப்புக்கொள்ள வைத்தேன். என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேல் விஜய் நடித்தார். பூவே உனக்காக நடிப்பதற்கு முன்னதாகவே ஒரிரு வருடங்களாகவே சில படங்களில் நடித்திருக்கிறார் விஜய். ஆனாலும் தமிழ் சினிமா ஏன் இவரை அடையாளம் காணவில்லை என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு முறை டயலாக் சொன்னால் போதும் அந்த வேரியேஷனுக்கு ஏற்ற மாதிரியாக நடிப்பார். நல்லா நடனம் ஆடுவார். ஃபைட் பண்ணுவார். இப்படியான திறமைசாளியை அடையாளப்படுத்த நான் ஒரு தூண்டுகோலாக அமைந்தது செம ஹாப்பி.. படத்தை பார்த்த விஜயின் அப்பா அம்மா ரொம்ப நெகிழ்ந்துபோனாங்க. அது எல்லாம் நான் சொல்லிக்கொடுத்தது இல்லை. அவருடைய சொந்த முயற்சி எல்லாமே. நான் இயக்கிய படங்களிலேயே 270 நாட்கள் ஓடிய படம் இதுதான். விநியோகஸ்தர்கள் படம் 365 நாள் ஓடும் என சொன்னாங்க..இடையில் தீபாவளி பண்டிகை வந்ததால வேறு ஒரு படத்தை 100 நாள் ஓட்ட வேண்டி படத்தை தூக்கிட்டாங்க. இல்லைனா படம் ஒரு வருடம் ஓடியிருக்கும்” என்ற விக்ரமன் படம் குறித்த மற்றொரு சுவாரஸ்யத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதாவது பூவே உனக்காக திரைப்படம் முதலில் பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கிறார். அதாவது ஒரு இளம்பெண் தன் காதலை சாக்ரஃபைஸ் செய்து , தான் காதலித்த காதலனை , அவன் காதலியோடு சேர்த்து வைப்பது போல எழுதியிருந்ததாகவும் , பின்னர் அதனை மேல் வெர்சனாக மாற்றியதாகவும் விக்ரமன் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget