மேலும் அறிய

Vijayakanth: விஜய் முதல் சரத்குமார் வரை... நடிகர் விஜயகாந்த் கைதூக்கிவிட்ட பிரபலங்கள்!  

Vijayakanth: திரைத்துறையிலும் சரி திரைத்துறை தாண்டியும் சரி எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு விஜயகாந்தால் பலன் பெற்றோர் ஏராளம்.

எங்கள் அண்ணா, புரட்சிக் கலைஞர், மக்கள் தலைவன் என கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத ஒன்றாக ஒட்டுமொத்த தமிழகத்தையுமே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது, சவாலானது. மனிதருள் மாணிக்கம் என வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் விஜயகாந்த். எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு அவரால் நலம் பெற்றோர் ஏராளம். 

Vijayakanth: விஜய் முதல் சரத்குமார் வரை... நடிகர் விஜயகாந்த் கைதூக்கிவிட்ட பிரபலங்கள்!  

ராசியில்லா நடிகர் :

சிறு வயது முதலே சினிமா மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்ததால் படிப்பில்கூட கவனம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியவர். தனக்கு இருக்கும் சினிமா ஆர்வத்தால் சென்னை வந்த அவர் பட்ட அவமானங்கள், ஏளனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. வாய்ப்பு கிடைத்ததே பெரிய குதிரை கொம்பாக இருந்த சமயத்தில் அவர் வாய்ப்பு கிடைத்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் ‘ராசியில்லா நடிகர்’ என்ற முத்திரை வேறு குத்தப்பட்டார். 

அவரை ஒதுக்கிய அதே சினிமா ஒரு கட்டத்தில் கொண்டாடியது. ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதித்து காட்டினார். இயக்குநர்களின் பேக் கிரவுண்ட் தெரிந்து பின்னர் அவர்கள் படங்களில் நடிக்கும் பழக்கம் இல்லாதவர். கதை பிடித்து இருந்தால் மட்டுமே அப்படத்தை தேர்ந்து எடுப்பார் தவிர அந்த இயக்குநர் எத்தனை வெற்றிப்படங்கள் கொடுத்து இருக்கிறார் என்பதை பற்றி  ஒரு நாளும் கணக்கிட்டது கிடையாது.

ஏராளமானோரை அறிமுகப்படுத்தியவர் :

அதற்கு காரணம் ஒரு இயக்குநர் அன்று தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததால் தானே இன்று அவரால் ஒரு உச்சபட்ச நடிகராகத் திகழ முடிகிறது என்பதை நினைத்து பார்த்தவர். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் ஏராளமான புதிய இயக்குநர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதே சமயம் அவர்கள் புதியவர்கள் தான் என்ற காரணத்தினால் அவர்களின் வேலைகளில், திரைக்கதையில் எக்காரணம் கொண்டும் என்றுமே தலையிட்டது கிடையாது. அத்தகைய பண்பாளர் விஜயகாந்த்.

Vijayakanth: விஜய் முதல் சரத்குமார் வரை... நடிகர் விஜயகாந்த் கைதூக்கிவிட்ட பிரபலங்கள்!  

நடிகர் விஜயகாந்த் மனிதர்களிடேயே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது கிடையாது. இயக்குநர்கள் முதல் தொழிலாளர்கள் வரையில் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகக் கூடியவர். அதே போல அனைவருக்கும் ஒரே மாதிரியாக உணவளித்தவர். 

தமிழ் சினிமா உலகை பொறுத்தவரையில் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஏராளமான நடிகர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல ஏராளமான இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் நடிகர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விஜய், சூர்யா ஆபாவாணன், லிவிங்ஸ்டன், ஆர்.கே.செல்வமணி, சம்பத், பி. வாசு, மன்சூர் அலிகான், கலைமணி, T. சிவா, செந்தில்நாதன், அருண்பாண்டியன், சரத்குமார், மகாராஜன், கசான்கான், மகாராஜன், தேவராஜ் என அவரால் பலன் பெற்ற நடிகர்கள், இயக்குநர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget