மேலும் அறிய

Cooku With Comali: குக்கு வித் கோமாளி அடுத்த சீசனின் கதி என்ன? விஜய் டிவியில் வெடித்த பிரச்னை!

Cooku With Comali: வெங்கடேஷ் பட் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முன்னதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின் வாங்கினார். 

தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டீவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான்.

குறிப்பாக அது இது எது, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டீவி மக்கள் மத்தியில் சென்றடைய முக்கியக் காரணமாக இருந்தன. இதனைப் பின்பற்றி மற்ற சேனல்கள் இதேபோன்ற ஷோக்களை நடத்தினர். இதனால் விஜய் டீவி தனது ரியாலிட்டி ஷோக்களில் புதுவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது. 

குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி விஜய் டீவியின் முன் பெரும்பான்மையான தமிழ் தெரிந்தவர்களை அமர வைத்தது. இதனால் விஜய் டீவிக்கு தனி மார்க்கெட் உருவானது. இந்த நிகழ்ச்சி கமர்ஷியலாகவும் பெரும் வெற்றி பெற்றது. 

விஜய் டீவியும் மீடியா மேஷனும் இணைந்து தொலைக்காட்சி வட்டாரத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இவர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீடியா மேஷன் நிறுவனம் விஜய் டீவிக்கு இனிமேல் எந்த நிகழ்ச்சியும் தயாரித்து வழங்கப்போவது கிடையாது எனவும், ஏற்கனவே தயாரித்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளையும் நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் குக்கு வித் கோமாளி ஷோவின் நடுவர்களில் ஒருவரான ஷெஃப் வெங்கடேஷ் பட்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முன்னதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின் வாங்கினார். 

இதனால் விஜய் டீவிக்கும் மீடியா மேஷனுக்கும் இருக்கும் பிரச்னை மட்டும் இல்லாமல், தற்போது செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது. இதனால்தான் செஃப் தாமு, தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.

இந்தப் பிரச்னைகளால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை மீடியா மேஷன் தயாரிக்காது என்பது தெளிவாகியுள்ளது. இது குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கு வித் கோமாளியின் அடுத்த சீசனை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் அடுத்த சீசன் இதற்கு முன்னர் வந்த சீசன்களைப் போல் எண்டர்டெய்ன்மெண்டாக இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget