சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
Ooroda Oththa Don Song Lyrics : அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா திரைப்படத்தின் முதல் பாடலான 'ஊரோட ஒத்த டான்' பாடலின் முழு பாடல் வரிகளை பார்க்கலாம்

விஜய் சேதுபதி, லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. சாய் அப்யங்கர், வங்கல் புள்ள விக்கி மற்றும் தமிழ் ஆதவன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு கே.கே. நகர் கானா ஜீவா வரிகள் எழுதியுள்ளார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய மாஸ் பாடலாக இது அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலின் பாடல்வரிகள் கீழ்வருமாறு
‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வரிகள்
ஆண் குரல்
ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கதை நகரும்
காலர தான் தூக்கி விட்டா
கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க பிளான்-ஆ போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு
தொகுரும் தொத்தலுங்க எல்லாம்
ஒதுங்குங்கடா ஜிபுராலுல
அடிச்சதெல்லாம் பெரிய தல
தொட்டுட்டு இல்ல அர பெடல
வெரப்பு வேணா
மொறப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன-ஆ போட்டு கட்டிட்டேனா
காசுமிங்க எல்லாம் தெளிஞ்சிடுவிங்கோ
வேணா வந்திராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
மாட்டின்னு வீணா நொந்துராத
மாட்டி நீ நொந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
வேணா பேச்சிக்கு வந்திராத
உட்டார்னா மிக்காவா
மாற்றா கோயிந்தா சைக்காவ
க்ளோஸா நீ பழகிட்டா நான்
அண்ணனுக்குமே லைக்கா வ
அண்ணனுக்கு நீ லைக்கா வ
மாற்றா கோயிந்தா சைக்காவ
க்ளோஸா நீ பழகிட்டா நான்
உட்டார்னா மிக்காவ
ஹம்மிங் ………………….
ஆண் குரல்
ஹே டுமாரு
ஷோக்கா நீ இடைய போட்டு
தொட்டுற போற பத்தாவ
ஆல் இன்-னு சுத்துற ஆளுங்க எல்லாம்
ஆதாரம் இல்லாம நெட்டாவா
குசுமின்னு கணக்கு போட்டு
தொட்டுற போற பத்தாவா
எறங்குனா எஸ்ரா டா டேய்
வேண்டிக்கோடா கத்தாவா
இசை …………………….
ஆண் குரல்
அண்ணன் பேர கேட்டா அலறிடுங்கடா
அக்காடிகளாம்
பயங்கர சேஷ்ட்டை நாளும்
நிப்பாருடா அண்ணன் சிங்கிளு
சிக்காத சிக்கன் ஆயிடுவா
மண்ணுக்கு மிச்சம் ஆயிடுவா
அடி நீ அதர பதர
அதர பதர
குசுன்னுக்குதாம்
குசுமி குதுரு
வேணா வந்திராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
கஜிரா கிஜிரா நந்துராத
மாட்டின்னு வீணா நொந்துராத
மாட்டி நீ நொந்துராத
கஜிரா கிஜிரா நந்துராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
வேணா பேச்சிக்கு வந்திராத
கத்தியெல்லாம் தேவ இல்ல
கைமாலுல வேலை நவுந்துடும்
ஜெகதம்மா சிக்கிக்கினா வைக்குற சப்புள
செவ்வுளு செவந்துடும்
அண்ணன் எடாகூடம் டா
கும்பலு கூடும் டா
அட்டியால ஆல் சோ சோ மிட்டா
தள்ளத்திங்கடா தெனவெட்டா
ஆண் குரல்
ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கதை நகரும்
காலரா தான் தூக்கி விட்டா
கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க பிளான்-ஆ போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு
தொகுரும் தோத்தலுங்க எல்லாம்
ஒதுங்குங்கடா ஜிபுராலுல
அடிச்சதெல்லாம் பெரிய தல
தொட்டுட்டு இல்ல அர பெடல
வெரப்பு வேணா
மொறப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன-ஆ போட்டு கட்டிட்டேனா
ஹம்மிங் ………………….
இசை …………………….
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























