மேலும் அறிய

vijay sethupathi | பிரபல நடிகைக்கு ஜோடியா..? ’நோ’ சொன்ன விஜய்சேதுபதி.. காரணம் இதுதான்!

படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க டோலிவுட் நடிகை கிருதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக விஜய் சேதுபதியிடம்  படக்குழு தெரிவித்ததாக தெரிகிறது.

புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘உப்பெண்ணா’ .இந்த படத்தில் வைஷ்ணவ் தேவ் மற்றும் கிருதி ஷெட்டி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்தனர். படத்தில் நாயகியின் தந்தையாகவும், மிரட்டும் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. உப்பெண்ணா படம் மூலமாகத்தான் விஜய் சேதுபதி முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க டோலிவுட் நடிகை கிருதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக விஜய் சேதுபதியிடம்  படக்குழு தெரிவித்ததாக தெரிகிறது. உடனே ”கிருதி ஷெட்டியுடன் நான் ஜோடியாக நடிக்க மாட்டேன்” என மறுத்துவிட்டாராம் விஜய் சேதுபதி. காரணம் ஒரு படத்தில் அந்த பெண்ணுக்கு தந்தையாக நடித்துவிட்டு , அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டாராம் . இதனை  படக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருதி ஷெட்டிக்கு சமூக வலைத்தளங்களில், குறிப்பாக தமிழக இளைஞர்கள் மத்தியில் செம கிரேஸ் உள்ளது . இவரை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினால் படத்திற்கு செம ஹைப்பாக இருக்கும் என எண்ணிய படக்குழுவின் முயற்சி  தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது கோலிவுட் பக்கம் உள்ள இளம் ஹீரோயின் பக்கம் திரும்பியுள்ளனராம் படக்குழு.

vijay sethupathi | பிரபல நடிகைக்கு ஜோடியா..? ’நோ’ சொன்ன விஜய்சேதுபதி.. காரணம் இதுதான்!

தென்னிந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு அசைவுகளும் சினிமா சபைகளில் அதிகம் கவனம் பெருகின்றன. தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களும் கூட விஜய் சேதுபதியின் ரசிகர்கள். விஜய் சேதுபதி படத்தில் தனக்கான ரோல் சரியாக இருந்து, கதைக்களம் சிறப்பாக இருந்தால் ஓகே சொல்லிவிடுகிறாராம் . குறைந்த பட்ஜெட் படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் என்ற பாகுபாடு பார்ப்பது இல்லையாம். படங்களின் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப தனது சம்பளத்தில் சமரசம் செய்துக்கொள்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஹீரோ , வில்லன் என்பதை தாண்டி தற்போது தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். 

vijay sethupathi | பிரபல நடிகைக்கு ஜோடியா..? ’நோ’ சொன்ன விஜய்சேதுபதி.. காரணம் இதுதான்!

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) . அரசியல் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும் , செப்டம்பர் 11-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. துக்ளக் தர்பார் படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படம் தவிர்த்து விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி என இன்னும் மூன்று படங்கள் இந்த மாத வெளியீட்டிற்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget