மேலும் அறிய

Dharmadurai 2 | தர்மதுரை 2 : விஜய் சேதுபதி நடிக்க மறுத்துட்டா நான் நடிப்பேன்.. தானே களமிறங்கும் தயாரிப்பாளர்

அவர் மறுத்தால் மற்ற இயக்குநர்களை நாடும் திட்டமுள்ளது என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்மதுரை. இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். சமீபத்தில் ட்விட்டர் வாயிலாக அவர் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.


இதனால் குஷியான ரசிகர்கள் சீனு ராமசாமி , விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக கொண்டாடினர். ஆனால் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து திட்டவட்டமாக மறுப்பு  தெரிவித்திருந்தார். அதில் “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.வாழ்த்துக்கள்.ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.ஆகவே அது சம்பந்தமான விசயத்தில்  எனக்கு எவ்வித சம்பந்தம்  இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில்  என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தில் யார் நடிக்க போகிறார்கள், யார் இயக்க போகிறார்கள் என தொடர்ந்து ஆர்.கே.சுரேஷிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ படத்தின் இயக்குநர் இன்னும் தேர்வாகவில்லை. சீனு ராமசாமியிடம் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம், அவர் பல படங்களை இயக்கி வருகிறார். அவரின் நேரம் கிடைத்தால் அவருடன் ஒப்பந்தம் செய்வோம் . அவர் மறுத்தால் மற்ற இயக்குநர்களை நாடும் திட்டமுள்ளது என்றார். மேலும் கதாநாயகனாக நடிக்க வைக்க விஜய் சேதுபதிதான் எங்களின் முதல் விருப்பம், ஆனால் அவர் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மறுத்தால் நானே இப்படத்தில் நாயகனாக நடிப்பேன்” என விளக்கமளித்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ்  தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தார தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து பலரின் வரவேற்பை பெற்றார் ஆர்.கே.சுரேஷ் தற்போது பல இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் தர்மதுரை படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
Seeman: கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget