காந்தி ஜெயந்தி வின்னர் பத்தா.. வசூலில் விஜய் சேதுபதி படத்துக்கு அடித்த ஜாக்பாட்!
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள பத்தா திரைப்படம் காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில் வெளியான படங்கலில் வசூலில் முன்னிலை பெற்றுள்ளது

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சிக்மா , ஏழு கடல் ஏழு மலை , அன்பில் அவன் , பத்தா ஆகிய நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா திரைப்படம் மற்ற படங்களைக் காட்டிலும் அதிக வசூல் ஈட்டி முன்னிலையில் இருந்து வருகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் , சீதக்காதி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பத்தா. லிஜோமோல் ஜோஸ், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சஹஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை முராத் கேத்தனி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர். 1986ஆம் ஆண்டு மெட்ராஸை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு சிறுவனுக்கு ஒரு ரவுடிக்கும் இடையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வு மூலம் மிக உணர்ச்சிகரமான ஒரு கதையை சொல்கிறது.
கதை , நடிப்பு , இசை என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களை பத்தா திரைப்படம் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் பத்தா படம் வசூலில் முன்னிலையில் இருந்து வருகிறது
நான்கு நாள் வசூல்
‘பத்தா’ திரைப்படம் வெளியான முதல் நாளைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்துள்ளது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்திய அளவில் ரூ.3.10 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.10.05 கோடி நெட் வசூலையும், ரூ.11.68 கோடி கிராஸ் வசூலையும் படம் பெற்றுள்ளது.
பிற படங்களின் வசூல்
அக்டோபர் 1-ம் தேதி வெளியான ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் நான்கு நாட்களில் ரூ.22.28 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அக்டோபர் 2-ம் தேதி வெளியான ‘சிக்மா’ படத்தின் மூன்று நாட்களில் 87.57 லட்சம் வசூல் செய்துள்ளது. அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ படத்தின் வசூல் அதைவிட குறைவாகவும் இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
Housefull shows, roaring crowds, and electric theatre vibes! 🔥 #Baththa continues its unstoppable run on Day 5, creating a massive box-office storm! 💥 #VijaySethupathi pic.twitter.com/7cobG4HC2d
— Aravind AK (@BeingAravind_) October 5, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















