மேலும் அறிய

Goli Soda: டீசருக்கு செம ரெஸ்பான்ஸ்! 7 மொழிகளில் ரிலீசாகும் விஜய் மில்டனின் கோலி சோடா ரைசிங்!

விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா ரைசிங் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய் மில்டன்.  பிரபல ஒளிப்பதிவாளரான இவர் 2014ம் ஆண்டு கோலி சோடா என்ற படம் மூலமாக இயக்குனராக உருவெடுத்தார். 10 என்றதுக்குள்ள, கோலி சோடா 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது கோலி சோடா ரைசிங் என்ற பெயரில் கோலி சோடாவின் 3வது பாகத்தை எடுத்துள்ளார்.

கோலி சோடா ரைசிங் டீசருக்கு வரவேற்பு:

திரைப்படமாக அல்லாமல் வெப்சீரிசாக இதை எடுத்துள்ளார். கோலி சோடா ரைசிங்-கின் டீசர் நேற்று வெளியாகியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன், ஷ்யாம், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் டிஸ்னி – ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த சீரிஸில் ஷாம், சேரன், அபிராமி ஆகியோருடன் புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

7 மொழிகளில் ரிலீஸ்:

இவர்களுடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். கோலி சோடா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த தொடர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வெப்சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார்.  தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த வெப்சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.

விஜய் மில்டன் கடைசியாக இயக்கிய பைரகி என்ற கன்னட படம், மழை பிடிக்காத மனிதன் படம் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் இந்த வெப்சீரிஸ் மூலமாக வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார்.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
MK Stalin: ”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
Embed widget