மேலும் அறிய

Vijay Deverakonda: வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விஜய் தேவரகொண்டா.. அவருக்கு அவரே கொடுத்த தண்டனை!

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக திகழும் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ஃபேமிலி ஸ்டார்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், மிருணாள் தாகூர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

லைகர் படத்தின் தோல்வியால் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

ஃபேமிலி ஸ்டார் படம்

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக திகழும் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ஃபேமிலி ஸ்டார்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், மிருணாள் தாகூர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திவ்யான்ஷா கௌசிக், அஜய் கோஷ், வாசுகி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படம் ஏப்ரல் 5 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்துக்கான பிரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தண்டனை கொடுத்த விஜய் தேவரகொண்டா

இதனிடையே இந்த படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “​​'லைகர்' படத்தின் தோல்வி குறித்தும் , பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிசல்ட்டிற்குப் பிறகு அவர் எப்படி உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு, “என்னுடைய அணுகுமுறையில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. ரிலீசுக்கு முன்னும் பின்னும் நான் அப்படியே தான் இருக்கிறேன்.

ஆனால் ஒரு சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அது என்னவென்று கேட்டால், அடுத்த 3 படங்களின் வெளியீட்டுக்கு முன்  அதன் முடிவுகளைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்துள்ளேன்” என விஜய் தேவரகொண்டா பதிலளித்தார். இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை எனவும் அவர் கூறினார். 

நடந்தது என்ன? 

கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்ற படம் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய இப்படத்தில்  அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோருடன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் லைகர் படத்தில் நடித்திருந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

சுமார் ரூ.100 கோடியில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது. வசூலையும் பெறாததை விட சிறப்பான சம்பவத்தால் விஜய் தேவரகொண்டா கடுமையாக கிண்டல் செய்யப்பட்டார். அதாவது லைகர் படம் விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக அமைந்தது. மேலும் பாலிவுட்டிலும் இதன்மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இப்படிப்பட்ட படம் நெகட்டிவ் ஆன விமர்சனம் பெற்றது. படத்தின் ரிலீசுக்கு முன் பேசிய விஜய் தேவரகொண்டா, ‘லைகர் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடி வசூலிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார். இதனால் தான் அவர் ஃபேமிலி ஸ்டார் படத்தை பற்றி பெரிதாக பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget