மேலும் அறிய

Applause to Vijay Deverkonda : ‘உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்’ - மேடையில் அறிவித்த விஜய் தேவரகொண்டா.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

டோலிவுட் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா தண்டு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். பலரும் இதற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

 

இன்றைய இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப் ஹீரோ விஜய் தேவரகொண்டா செய்துள்ள ஒரு காரியம் தான் டாக் ஆஃப் தி டவுன்னாக உள்ளது.  டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'லிகர்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் துவண்டு போன விஜய் தேவரகொண்டா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். 

 

Applause to Vijay Deverkonda : ‘உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்’ - மேடையில் அறிவித்த விஜய் தேவரகொண்டா.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

உறுப்பு தானம் செய்த விஜய் தேவரகொண்டா :

இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் குழந்தைகள் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் தொடர்பான நோய்கள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பேஸ் மருத்துவமனை மற்றும் கல்லீரல் கணையம் அறக்கட்டளை இணைந்து நடத்தியது.

பல நாட்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் விஜய் தேவரகொண்டா. அவர் பேசுகையில் " பல அறுவை சிகிச்சைகள் அரசாங்கத்தின் உதவியாலும், நல் உள்ளங்களின் நன்கொடையாலும் நடைபெறுவதை பற்றி கேள்விப்பட்டேன். மனிதாபிமானம் உள்ள பலர் உறுப்பு தானம் செய்ய முன்வருகிறார்கள். உறுப்புகளின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான போதிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் இல்லை. இறந்த பிறகு உறுப்புக்கள் வீணாக போவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் எனது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். நாம் இறந்த பிறகு வீணாக போகும் உறுப்புகளை தேவைப்படுவோருக்கு தானம் செய்வதன் மூலம் வேறு ஒருவரின் உடலில் வாழ முடியும்" என்றார் விஜய் தேவரகொண்டா. அவருடன் அவரது அம்மாவின் உடல் உறுப்புகளையும் தானம் செய்ய ரெஜிஸ்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

பாராட்டுகள் குவிகிறது :

அவரின் இந்த செயலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இணையத்தில் நெட்டிசன்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இது போல வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் தனது உடல் உறுப்பு தானம் குறித்து அறிவித்ததை எண்ணி பலரும் மெய்சிலிர்க்கிறார்கள். லீடிங் ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக அமையும்.  நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை சமந்தா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'குஷி'. இது அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget