மேலும் அறிய

திருமணம் வீடியோவை 60 கோடிக்கு விலைபேசிய ஓடிடி நிறுவனம்...ஆஃபரை மறுத்த விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா திருமணத்தை ஆவணப்படமாக வெளியிட பிரபல ஓடிடி தளம் பெரும் தொகை கொடுத்து வாங்க முன்வந்த நிலையில் இந்த ஆஃபரை விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது

பல வருடங்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரது தரப்பில் இருந்து திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. தங்களது திருமணத்தை தனிப்பட்ட ஒரு நிகழ்வாக வைத்துக்கொள்ளவே இருவரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் விஜய் மற்றும் ராஷ்மிகா திருமணத்தை ஆவணப்படமாக வெளியிடுவதற்கு பெரும் தொகை கொடுத்து வாங்க முன்வந்துள்ளது. 

60 கோடியை மறுத்த விஜய் தேவரகொண்டா

சினிமா தவிர்த்து சினிமா நட்சத்திரங்களில் திருமண நிகழ்வுகளும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்த கலாச்சாரம் முதலில் பாலிவுட்டில் இருந்து தொடங்கியது. தீபிகா படுகோன் , கியாரா அத்வானி போன்ற நட்சத்திரங்களின் திருமணங்கள் ஒரு திரைப்படத்திற்கு நிகரான அனுபவமாக வெளியாகின. பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தென் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் அவரது திருமண நிகழ்வு இடம்பெற்றது. இந்த திருமண நிகழ்வை நெட்ஃப்ளிக்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியது. 

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் திருமண ஆவணப்படத்தை 60 கோடிக்கு நெட்ஃளிக்ஸ் தளம் விலை பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தங்களது திருமண நிகழ்வை மனதிற்கு நெருக்கமாக வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறி இந்த ஆஃபரை விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளார். தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களையும் தனியாக ஆள் போட்டு வீடியோக்களாக பதிவிட்டு வரும் பிரபலங்கள் மத்தியில் விஜய் தேவரகொண்டாவின் இந்த முடிவு ரசிகரகளிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

பிப்ரவரி 26 திருமணம் 

வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இரு  நடிகர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Embed widget