மேலும் அறிய

விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு

இயக்குநர் சசி-நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணையும், ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) கதையை சொல்லும் உணர்வுப்பூர்வமான திரைப்படம் 'நூறு சாமி'  ஜூன் 19 உலகெங்கும் வெளியாகிறது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி' திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி', உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கிராமத்து பின்னணியில் ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) உணர்வுப்பூர்வமான கதையை சொல்லும் திரைப்படம் ஆகும். 

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'நூறு சாமி' திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, "தாயை தெய்வமாக மதித்தான் அது 'பிச்சைக்காரன்', தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது 'நூறு சாமி'. இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் வெகுகாலம் பேசப்படும்," என்றார். 

'பிச்சைக்காரன்' படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனியுடன் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் சசி, "ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பை தந்துள்ளார். 'நூறு சாமி' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார்," என்றார்.

நகரம், கிராமம் என இரு பின்னணிகளிலும் படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சசி, "நகரத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் எனக்கு கிராமத்துக் கதைகளை எடுக்க மிகவும் பிடித்துள்ளது. அவற்றில் உள்ள சவால்களும், இடம் பெறும் மண் மணம் மாறா கதை மாந்தர்களும் இதற்கு காரணம்," என்றார்.

'நூறு சாமி' திரைப்படத்திற்கு பாலஜி ஸ்ரீராம் இசையமைக்க, எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். ஹரிஷ் யுவராஜ் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்க, வி. சசிகுமார் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நடனம்: விஜி சதீஷ், சண்டைப் பயிற்சி: ராம்குமார், பாடல்கள்: மோகன் ராஜன், உடைகள் வடிவமைப்பு: துர்கா பிரியா, உடைகள்: கணேஷ். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில், சசி இயக்கத்தில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி' திரைப்படம்  வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget