![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vijay Antony : மாசத்துக்கு ஒரு பட அப்டேட் விடும் விஜய் ஆண்டனி...ககனமார்கன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
விஜய் ஆண்டனி நடித்து லியோ ஜான் பால் இயக்கி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுளளது
![Vijay Antony : மாசத்துக்கு ஒரு பட அப்டேட் விடும் விஜய் ஆண்டனி...ககனமார்கன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது Vijay antony Starrer Ga Gana Maargan directed by Leo John Paul first look out now Vijay Antony : மாசத்துக்கு ஒரு பட அப்டேட் விடும் விஜய் ஆண்டனி...ககனமார்கன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/16/7ee3161ef1d68d8a578f803b941407431729059919316572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் ஆண்டனி
பெரிய ஸ்டார்கள் எல்லாம் ஆண்டுக்கு ஒரு படம் வெளியிட்டு வரும் நிலையில் விஜய் ஆண்டனி மட்டும் மாசத்திற்கு ஒரு புது படத்தின் அப்டேட் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு தமிழரசன் , பிச்சைக்காரன் 2 , கொலை , ரத்தம் , என அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு ரோமியோ , மழை பிடிக்காத மனிதன் , ஹிட்லர் என இதுவரை மூன்று படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது அவர் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
ககனமார்கன்
லியோ ஜான் பால் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு 12 ஆவது படமாகும். ககனமார்கன் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பாதி உடல் மொத்தம் கருப்பு நிறம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட அவர் படத்தின் கெட் அப்பில் இருந்தபடியே கலந்துகொண்டார் . விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஹாரர் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ககனமார்கன் 🪱 #గగనమార్గన్ 🪱 #गगनमार्गन 🪱 #ഗഗനമാർഗൻ 🪱 #ಗಗನಮಾರ್ಗನ್@leojohnpaultw @AJDhishan990 @DopYuva @mrsvijayantony@vijayantonyfilm pic.twitter.com/MQAXHLSoiA
— vijayantony (@vijayantony) October 16, 2024
இசையமைப்பாளராக கலக்கி பல ஹிட் பாடல்கலை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படம் பெரியளவில் ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். பிச்சைக்காரன் , சலிம் ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை. விஜய் ஆண்டனி நடிப்பு மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஹிட்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தெலுங்கு படங்களுக்கு கூட நம்பி போக முடிகிறது ஆனால் விஜய் ஆண்டனி படத்தை பொறுமையாக பார்த்து வீடு வந்து சேர்வது இப்போதெல்லாம் ரொம்ப சிரமமாகிவிட்டது. பாத்து பண்ணுங்க சார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)