மேலும் அறிய

Watch Video: உன்னுடனான 8வது பிறந்தநாள்! நயன் அன்பை குறிப்பிட்டு நெகிழ்ச்சி வீடியோ பதிவிட்ட விக்னேஷ்!

Vignesh Shivan Birthday Celebration:- நடிகை நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் நடிகை நயன் தாராவிற்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இருவரும் அவ்வப்போது ஜோடியாக படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 18ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இருவரும் துபாயின் புர்ஜ் கலிஃபாவின் முன் நிற்பது போன்ற படங்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகையும் தன்னுடைய மனைவியுமான நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், “உன்னுடன் நான் கொண்டாடும் 8வது பிறந்தநாள் இது தங்கமே. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் நீ மிகவும் அழகாக மாற்றி வருகிறார். எனக்கு எது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உனக்கு தெரியும். இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாளாக அமைந்தது. என்னுடைய காதலியாக இருப்பதற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் நம்முடைய காதல் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அவரின் இந்தப் பதிவை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

பெற்றோர்கள் காவல்துறையை சேர்ந்த நிலையில், நடிகராகும் ஆசையில் சிவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரீ ஆனார் விக்னேஷ் சிவன். ஆனால் காலம் அவரை இயக்குநராக்கி அழகு பார்த்தது. சிம்பு, வரலட்சுமி நடித்த “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். விஜய்யின் துப்பாக்கிக்கு எதிராக ரிலீசான போதும் கலவையான விமர்சனங்களையே அப்படம் பெற்றது. 

தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன கேரக்டரில் வந்த விக்னேஷ் சிவன், அதன் மூலம் தனுஷூடன் ஏற்பட்ட நட்பின் மூலம், அவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் கீழ் “நானும் ரௌடி தான்” படத்தை எடுத்தார்.விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இப்படமே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த இடமாகவும் அமைந்தது. 

அடுத்ததாக சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகளில் ஒரு எபிசோடு, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய 5 படங்களை மட்டுமே இந்த 10 வருடத்தில் இயக்கியுள்ளார். அதேசமயம் பாடலாசிரியராக  வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, ரெமோ, கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, தானா சேர்ந்த கூட்டம், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார். 

இதற்கிடையில் 7 வருட காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, நயன்தாராவை இந்தாண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின் பல இடங்களுக்கு டூர் சென்ற இந்த ஜோடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்வித்தனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget