மேலும் அறிய

Viduthalai Part 1: ’விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? இந்த மாத இறுதியில் வெளியாகும் முதல் பாகம்!

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும், போராளியாக நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

'விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகும் படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

இளையராஜாவுடன் முதன்முறை கூட்டணி

வெற்றிமாறன் இந்தப் படத்தின் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும், போராளியாக நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.

எனினும் படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்து அறிவிக்கப்படாமலேயே இருந்த நிலையில் படம் இந்த மாதத்துக்குள் வெளியாகும் என் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன்  தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இந்தப் படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் வெளியீடு

அதன்படி, வரும் மார்ச் 31ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டது அவரது ரசிகர்களை உற்சாகத்தில்  ஆழ்த்தியது.

விடுதலை பட ட்ரெய்லரும் அன்றைய தினம் வெளியான நிலையில், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவில் பேசினர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை முதன்முறையாக கதாநாயகனாக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு சூரி நன்றி தெரிவித்தார். மேலும் படம் பார்த்து விட்டு தனக்கு நடிகர் விஜய் சேதுபதி ஃபோனிலேயே முத்த மழை பொழிந்தார் என்றும் தெரிவித்தார்.

நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி

அதேபோல் தான் வடசென்னை பட வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து நடிகர் விஜய் சேதுபதி இந்த விழாவில் நினைவுகூர்ந்திருந்தார்.

தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், விடுதலை படம் தொடங்கியதற்கு இளையராஜா தான் காரணம் என்றும், இளையராஜாவை பாலுமகேந்திராவிடம் பணியாற்றியபோது தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தற்போது தான் அருகிலிருந்து அவரைப் பார்த்து ரசித்து பணிபுரிந்திருப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் - ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்! 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget